சப்தசுரங்களும் கிரக மாறுதலாகச் சஞ்சரித்து அளவிறந்த இராகங்களை உண்டாக்குகின்றனவோ அப்படியே எழுவகைத் தோற்றத்திலும் சீவர்களும் தூல சூக்கும சரீரங்களில் அளவிறந்த பேதங்களையடைகிறார்கள். தூல சூக்கும சரீரங்களின் வேறு சில அம்சங்களும் இவ்வளவிற்கு ஒத்ததாயிருக்கக் காண்போம். தூல சரீரத்தின் அளவு எட்டுச் சாண் என்றும் ஒவ்வொரு சாணும் பன்னிரண்டு அங்குலம் அல்லது விரற்கடை யென்றும் இவ்வளவின்படியே ‘எறும்பும் தன்கையால் எட்டுச் சாண்’ என்றபடி, எழு வகைத் தோற்றங்களும் ஒற்றுமையான அளவுடைய வைகளாய் அமைந்திருக்க வேண்டும். இது போலவே சீவனானது பன்னிரண்டு அங்குல சுவாசத்தில் பதினாறு கலையாய்ச் சஞ்சரிப்பதையும் எட்டு அங்குல சுவாசத்தில் நிலையாய் நிற்பதையும் பெரியயோர்கள் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தூல சூக்கும காரணங்களின் தன்மையை அறிந்த பெரியோர் எப்போதும் தெய்வத்தைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். தெய்வ சந்நிதியில் சகல பரிசுத்தவான்களும் ஓயாமல் துதித்துக்கொண்டிருக்கிறார்களென்று நாம் கவனிக்கையில் சங்கீதத்தின் முக்கியமான சில அம்சங்களை தூல சூக்கும காரண சரீரங்களின் அமைப்பிற்கு ஒத்ததாக அமைத்து வழங்கிவந்திருக்கிறார்களென்று நாம் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். முதல் முதல் நாதசொரூபியாய்த் தோன்றிய அவன் எழுவகைத் தோற்றமானபின் ஏழு சுரமுள்ள சங்கீதத்தை அப்பியாசித்துப் பழையபடி நாதபிரம்மத்திற் கலக்கும் நிலையை அடைகிறான் என்பது மிகப் பொருத்தமானதே. இதைத்தவிர சீவர்கள்மனம் நிலைப்பதற்கு அதாவது தெய்வத்தை யடைதவற்குச் சுலபமான சாதனங்கள் வேறு இல்லை. பகவத் தோத்திரங்களாகிய பண்களை உள்ள முருகப்பாடும் உத்தமர்கள் இவ்வுண்மையை அறிவார்கள். துவாதசாந்த நிலையில் எப்படிக் கீழ்சட்சமமானது மேல் சட்சமத்தின் சுருதியோடு பேத மறக் கலந்துநின்றதோ அப்படியே உத்தமர்களும் தெய்வத்தோடு கலக்கச் சங்கீதத்தைக்கொண்டு அப்பியாசித்தார்கள். மேல் சட்சமத்தின் சுருதியோடு கலந்துநின்ற இடமே சங்சீதத்தில் இன்பமான இடமென்று தங்கள் அனுபவத்தாற் கண்டதுபோலவே தெய்வபக்தியில் ஈடுபட்டுத்தெய்வ சந்நிதியில் உள்ளமுருகி நின்ற இடமே சுகமென்று தங்கள் நாட்களை ஜீவகாருணியத்தில் பின்னிட்டார்கள். மலந்த பூவிற்கு மணமும் கனிந்தபழத்திற்குச் சுவையும் எப்படிச் சிறந்திருக்குமோ அப்படியே தங்கள் வாழ்நாட்களை வாசனையோடும் காருணியத்தோடும் கழித்தார்கள். சம்சாரமாகிய துன்பசாகரத்தைக்கடக்க தேவ தோத்திரங்களடங்கிய பண்ணிகளாகிய மரக்கலத்தையே தங்களுக்கு ஆதாரமென்று உறுதியாய்க் கைப்பற்றினார்கள். முன் ஊழியில் தென்மதுரையில் பூர்வ தமிழ் மக்கள் பழகிவந்த கானத்தின் பயிற்சி மிகவிஸ்தாரம் பெற்றிருந்த காலத்தில் ஒருவரும் சொல்லாமலே விளங்கி வந்த சில முக்கிய இரகசியங்கள் பின் ஊழியில் முக்கிய மிழந்து குறைந்தன. இப்படிக்குறைந்த காலத்தில் இளங்கோவடிகள் எழுதிய சங்கீதத்தின் சிலபாகமும் சந்தேக நிலையில் வந்தது. சந்தேக காலத்தில் தங்கள் ஆராய்ச்சிக்கு வந்த சில விஷயங்களை ஒன்று சேர்த்து தங்கள் தங்கள் பாஷையில் சங்கீத நூலாக எழுதி வைத்தார் மற்றவர். இதில் சாரங்கதேவர் ஒருவரே மிக விரிவாய் எழுதியவர். தமக்குச் சுமார் 1,200 வருடங்களுக்கு முன்னிருந்த இளங்கோவடிகளின் அபிப்பிராயத்தையும் அதற்குமுன் சுமார் 8,000 வருடத்திலிருந்த தொல்
|