பக்கம் எண் :

800
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

3. மனுட சூக்கும தத்துவங்களும் யாழ் ஓசையின் அமைப்பும்.

நாம் இதன்முன் சரீர அமைப்பில் சில விஷயங்கள் யாழ் அமைப்பில் ஒத்திருக்கிறதெற்று தூல மாகப் பார்த்தோம். அப்படியே சூக்கும சரீரத்தில் எப்படி ஒத்திருக்கிறதென்று சில குறிப்புக்களை நாம் பார்க்கவேண்டும். மனுடசரீரத்தில் பிராணனையும் பிராண வாயுவின் பல செயல்களையும் எப்படி அறிகிறோமோ அப்படியே யாழின் ஓசையும் அதன் பாகுபாடுகளுமிருக்கின்றனவென்று காண்போம்.

எப்படிப் பிராணனானது தூல சரீரத்தில் மேல் ஆறுகீழ் ஆறு என்னும் பன்னிரண்டு ஸ்தானங்களில் சஞ்சரித்துச் சீவச்செயலை விளக்கிக் கொண்டிருக்கிறதோ அப்படியே யாழிலும் மத்தி மத்தின் கீழ் ஆறு மேல் ஆறு என்னும் பன்னிரண்டு ஸ்தானங்களில் நாதமானது சஞ்சரித்து அளவிறந்த இராகமூர்ச்சனைகளை யுண்டாக்குகிறது.

எப்படி ஒரு சரீரத்தில் மும்மூல ஸ்தானங்களை சுவர்க்கம், மத்தியம், பாதாளம் என்று மூன்றுலோகமாக வழங்குகிறோமோ அப்படியே யாழிலும் மந்தரம், மத்தியம், தாரம் என்னும் மூன்று ஸ்தாயி சுரங்கள் சொல்லப்படுகின்றன.

தூலசரீரத்தின் பஞ்சீகரண தத்துவங்கள் இருபத்தைந்திருப்பதுபோலச் சூக்கும சரீரத்திலு பஞ்சீகரண செயல்கள் இருபத்தைந்து தத்துவங்களுடைய தாயிருக்கிறதென்று இதன்முன் பார்த்தோம். அப்படியே யாழிலும் தூலவடிவாக 24 மெட்டுக்களும் சூக்கும வடிவமான 24 ஓசைகளும் பொருந்தியிருப்பதாகக் காண்போம். மேலும் தூல, சூக்கும, காரண சரீரத்தின் பஞ்சீகரண தத்துவங்கள் ஒவ்வொன்றும் இருபத்தைந்தாயிருப்பது போலவே மந்தர மத்திய தாரமென்னும் மூன்று ஸ்தாயிகளிலும் சுருதிகள் இருபத்தைந்தாயிருக்கின்றன. ஒரு ஸ்தாயியில் சட்சமத்தில் ஆரம்பித்து மேல் சட்சத்தில் முடியும்பொழுது 25 சுருதிகளாக வருவதை நாம் அறிவோம். அதில் ஆரம்ப சுரமாகிய மேரு சுரத்தைவிட்டு அதன் மேலுள்ளரிஷப முதற்கொண்டு ஆரம்பித்து அந்த ஸ்தாயியின் முடிந்த சுரமாகிய சட்சமத்தைச் சேர்க்க இருபத்துநான்கேயாம். அதுபோலவே பஞ்சீகரணச் செயல்பெற்ற ஒவ்வொரு சரீரத்தின் தத்துவங்கள் இருபத்தைந்தாயிருந்தாலும் தூலசரீரத்தின் இருபத்தைந்தாவதுதத்துவம் சூக்கும சரீரத்திற்கு வித்தாயும் சூக்கும சரீரத்தின் 25வது தத்துவம் காரண சரீரத்தின் வித்தாயும் காரண சரீரத்தின் 25வது தத்துவம் அண்டபுவன சராசரங்கள்யாவும் உண்டாவதற்கு வித்தாயும் நிற்பதனால் தத்துவங்கள் இருபத்து நான்கே என்று சொல்வோம். இதுபோலவே மந்தர மத்திய தாரமென்னும் மூன்று ஸ்தாயிகளிலும் முடிந்த சுரம் இருபத்தைந்தாவதாக எண்ணப்பட்டாலும் அவைகள் ஒவ்வொன்றும் அடுத்த அடுத்த ஸ்தாயிகளுக்குத் துவங்கும் சுரமாகவும் முடியும் சுரமாகவும் வருவதினால் சுருதிகள் ஒர ஸ்தாயியில் இருபத்து நான்கென்றே கணக்கிடவேண்டும். ஒரு ஸ்தாயியில் சுரங்கள் ஏழு என்றும் அவைகள்பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிற தென்றும் இதன் முன் பார்த்தோம். இராசிவட்டத்தில் பன்னிரண்டு சுரங்களையும் அவைகளின் அலகு முறையையும் அவற்றுள் பொருத்த சுரங்கள் இன்னதென்பதையும் எந்த எந்த சுரத்திற்கு அலகு குறைக்கவேண்டு மென்பதையும் வெகு தெளிவாகச் சொல்லி அதன்படி கானம்செய்து வந்திருக்கிறார்களென்று இதற்கு முந்திய மூன்றாம் பாகத்தில் பார்த்தோம்.

தூலசரீரம் ஏழு தாதுக்களினால் பூரணப்படுகிறதுபோலவே வீணையும் ஏழுதந்திகளினால் பூரணப் ப்டுகிறதென்று இதன்முன் பார்த்தோம். அப்படியே சூக்கும சரீரத்தில்