பக்கம் எண் :

801
மனுட சூக்கும தத்துவங்களும் யாழ் ஓசையின் அமைப்பும்.

சீவனானது ஏழு அறிவுபெற்றுச் செயலுடையதாகிறது. இதுபோலவே பன்னிரண்டு ஸ்தானங்களிலும் இசை பொருத்தத்துடன் வரும் ஏழு சுரமும் மூர்ச்சனையென்று நாம் சாதாரணமாய்ச் சொல்லும் ஒரு இராகமாகிறது. பூர்வதமிழ்மக்கள் இசைத்தமிழில் வழங்கிவந்த ஏழு, பன்னிரண்டு இருபத்துநான்கு என்னும் எண்கள் வேதாந்த சாஸ்திரத்திலும் வைத்திய சாஸ்திரத்திலும் சோதிடத்திலும் சத்தியவேதத்திலும் உபநிடதங்களிலும் வழங்கிவந்திருக்கின்றன என்பதைப் பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.

பின்வரும்வாக்கியங்களின் கருத்தையும் சங்கேதங்களையும் நாம் ஒருவாறு அறிந்திரப்போம். அதனால் விரிஞ்சி அவை தொகுத்துக்காட்டப் பட்டிருக்கின்றன. இதன் பின் சுருதிகளைப்பற்றிச் சொல்லும் கணித முறையிலும் அங்கங்கே குறிப்பிடும்பொழுது இவைகளினின்றும் இவை போல்வனவற்றினின்றும் எடுத்துச்சொல்வோம்.

மைத்திராயண்ணியுபநிஷத் பக்கம் 97.

சுருதி சொலுகிறதென்னவெனில், சப்த பிர்ம்மம் பரபிர்மே மிரண்டையும் அறியவேண்டியது. சப்த பிர்ம்மத்தில் செவ்வையாய்த் தேர்ந்தவன் (பிரணவமாகிற ஓங்காரத்தைப் பிர்ம்ம சுவ ரூபமாய்த் தியானித்து அதில் நிலையுற்றவன்) பிர்ம்மத்தை யடைகிறான்.

இங்கே சப்த பிர்ம்மமென்பது இன்னிசையான கீதத்தோடு சொல்லப்பட்டுவந்த வேதம் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மைத்திராயண்ணியுபநிஷத் பக்கம் 61.

சூரிய சம்பந்தமான, ருக்காகிய காயத்திரியினாலேயும் உபாசிக்கவேண்டியது. பிர்ம்மத்திற்கு மூர்த்தம் அமூர்த்தம் என விரண்டு ரூபங்களுண்டு. எது மூர்த்தமோ (உருவமோ) அது அசத்தியமானது. அமூர்த்தம் எதுவோ அது சத்தியமானது. இதுதான் பிர்ம்மம். அதே தேஜஸ், எது தேஜஸோ அது சூரியன். இந்த சூரியன்தான் ஓம் என்கிற ஆத்மாவானான் அவன் (அந்த சூரியன் பிரணவமாகிய) தன்னை மூன்று விதமாய்ச் செய்தான். ஓம் என்றது மூன்று மாத்திரைகள். (அவையாவன அ, உ, ம் இவைகள் தான், இந்த மூன்று மாத்திரைகள்தான் அவயவங்கள்.) “இவைகளினாலே இந்த (பிரபஞ்சம்) சகலமும் குறுக்கும் நெடுக்குமாய் (குறுக்கும் நெடுக்குமாய் நெய்யப்பட்டிருக்கிற துணிபோல) கோர்க்கப்பட்டிருக்கிறது. இது நானென்று (சூரியன்) சொன்னான்.”

தள்ளும் செயல் இழுக்கும் செயல் ஒன்று சேர்ந்து (Positive, negative) சுழலும் செயல் (Effect) எப்படி உண்டாயிற்றோ சுற்றப்பட்ட கயிற்றை ஒரு கையினால் இழுக்கவும் மற்றொரு கையில் பிடித்திருக்கும் பம்பரச் சட்டத்தினால் தள்ளவும் பெற்ற பம்பரம் எப்படி ஆடுகிறதோ அப்படியே ஊடும் பாவுமாக நெய்யப்பட்ட நூல்கள் ஒரு வஸ்திரமாகிறது. நமது அனுபவத்தில் தினமும் காணக்கூடிய வஸ்திரத்தை இங்கே உபமானம் சொல்லுகிறார். அகாரம் வலமுறையாய்ச் சுழித்து இடது பக்கம் போவதையும் உகாரம் வலமுறையாய்ச் சுழித்து வலப்பக்கம் போவதையும் நாம் காண்போம். இதுபோலவே ஒன்றற்கொன்று எதிரிடையான செயல்பெற்ற இரு சக்திகளால் உலகத்தின் செயல்கள் அத்ததையும் நடந்துகொண்டிருக்கிறதென்று பெரியோர் சொல்லுகிறார்கள். மணிக்கு ஒளியும் பூவிற்கு மணமும் தேனுக்குச் சுவையும் புருடனுக்கு ஸ்திரீயும் உடலுக்கு உயிரும் எப்படி அமைந்திருக்கிறதோ அப்படியே காணப்படுவதும் காணப்படாததுமான இரண்டு சக்திகள் சத்தி சிவமாகக் கலக்க சகல செயல்களும் நடந்துவருகின்றனவென்றும் அச்செயல்களே அகாரம், உகாரம், மகாரம், என்றும் சத்து, சித்து, ஆனந்தமென்றும் இங்கே குறிக்கிறதாக நாம் அறியவேண்டும். ஆரோகண அவரோகணமாய் அமைந்த