பக்கம் எண் :

802
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஒரு மூர்ச்ச.னையில் ஜீவசுரத்திற்கு மேலும் கீழுமாகப் பிரஸ்தரிப்பது இன்பத்தைக் தரக்கூடிய தென்பதை நாம் அறிவோம். இதுபோலவே ஒவ்வொரு பொருளும் செயல்பெற்று ஆனந்த மயமாய் விளங்குகிறது. இதையே கர்த்தன் திருவிளையாட்டென்றும் ஓம் என்றும் பெரியோர்கள் சொன்னார்கள்.

இப்பொருளை உள்ளடக்கியே மந்திரங்களும் ஜெபங்களும் தவங்களும் வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்லப்பட்டன. இவற்றில் கணித (சோதிட) சாஸ்திரமும் இலக்கண சாஸ்திரமும் வேதாந்த சாஸ்திரமும் உடற்கூறு சாஸ்திரமும் சங்கீத சாஸ்திரமும் மருத்துவ சாஸ்திரமும் மிகமுக்கியமானவையேன்றும் ஒன்றற்கொன்று சம்பந்த முள்ளவையென்றும் சிறந்தவையென்றும் நாம் அறிவோம். ஒரு சாஸ்திரத்தின் கருப்பொருளைத் தெளிவாய் அறிந்துகொண்டோமானால் மற்ற ஒவ்வொன்றினுடைய கருப்பொருளும் ஒருவாறு தெளிவாகும்.

கண்ணின் கருவிழிபோலவும் சக்கரத்தின் நடுமத்திபோலவும் திரிகையின் நடுமுளை போலவும் அண்டத்தின் நடுமத்தியில் நிற்கும் பூமி அக்கினியும் உடம்பின் நடுமத்தியாயுள்ள உதராக்கினியும் (பசியும்) சூக்கும சரீரத்தின் நடுமத்தியாய் நின்ற கண்ணொளியும் (நேத்திராக்கினியும்) காரண சரீரத்தின் நடுமத்தியாய் நின்ற ஞானாக்கினியும் இருபத்தைந்து இருபத்தைந்து தத்துவங்களில் பதின்மூன்றாவது பதின்மூன்றாவதாக வருகிறதை அறிவோம். இதுபோலவே இவ்வண்டத்தையும் மற்றும் பல கோடி அண்டங்களையும் தாங்கிவரும் சூரியனானது நடு நிலைபெற்றுச் சுழன்று கொண்டிருக்கிறது. இதை யாவரும் அறிவோம். இச்சூரியன் முன்னிலையில் வெப்பமும் பிரகாசமும் ஜீவனும் செயலும் மணமும் குண முதலிய யாவும் பெற்று அண்ட கோடிகளும் அண்டத்திலுள்ள ஜீவர்களும் பிழைத்தும் நசித்தும் வருகிறார்களென்பதை இங்கு சொல்லுகிறார். இதுபோலவே அசையும் பொருள்களும் அசையாப்பொருள்களும் காத்து அழிக்கப்பட்டு வருகின்றனவென்று சொல்லுகிறார். இந்த சக்தியையே பிர்ம்மமென்றும் ஆத்மாவென்றும் சத்தியமென்றும் அகார, உகார, மகாரான ஓங்காரம் அல்லது பிரணவமென்றும் சூரியனென்றும் இந்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டுமென்றும் இந்த ஜெபத்தைச் சொல்லுகிறவன் முத்திபெறுகிளான் என்றும் சொல்லுகிறார். இம்மூல அட்சரத்தினின்றே ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு அட்சரங்களும் உண்டாயின வென்பதையும் ஆறு. ஈறு சாஸ்திரங்களும் பன்னிரண்டு ஸ்தானங்களும் இராசிகளும் எழுவகைத் தோற்றங்களும் ஏழு சுரங்களும் மற்றும் அனந்தபேதங்களும் உண்டாயிருக்கின்றன வென்பதையும் நாம் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது.

மைத்திராயண்ணியுபநிஷத் பக்கம் 65.

மற்றொரு விடத்திலும் (வேறு சுருதியிலும்) சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது) “ஓங்காரமானது இதற்கு (பிராண ஆதித்திய ஆத்மாவுக்கு) சப்த சரீரம் (உதாத்த அனுதாத்த சுவரிதமாகிற சப்தம்தான் சரீரம்). அவனுக்கு ஆண்பால் பெண்பால் அஃறிணைப்பால் இவைகள் லிங்கசரீரம். அவனுக்கு அக்கிநி, வாயு, ஆதித்தன் பிரகாச சுவரூபமான சரீரம்,

மைத்திராயண்ணியுபநிஷத் பக்கம் 147-149.

மூலாதாரத்திற்கு மேலிருக்கிற அக்கிநி மண்டலமானது அதிலிருக்கிற அக்கிநியினால் உஷ்னத்தை உடைந்து அதானது சுவாசமாகிற காற்றினாலூதப்பட்டு பிர்ம்ம தேஜஸாகிற நாத மாத்திரமான ஓங்காரமானது விபாகமில்லாத ஓமென்கிற அக்ஷரமாக பிரகாசப்படுகிறது. அக்ஷர உற்பத்தி ஸ்தானங்களாகிய கழுத்து தாலு முதலான விடங்களில் சம்பந்தப்படும்போது பல அக்ஷர சுவ ரூபமாகி வேதத்தினுடைய பல கிளைகளாகிறது.