பக்கம் எண் :

815
மனுட சுவாசத்திற்கு யாழ் ஓசையின் அலை ஒத்திருக்கிறதென்பது.

இப்படிப்பட்ட சில இரகசியங்களைப் பல உவமானங்களினாலும் குறிப்புக்களினாலும் அங்கங்கே சொல்லி வைத்திருக்கிறார்கள். சுவாசத்தின் இயக்கத்தைக்குறைத்து அதினால் நித்தியதத்துவம் பெறும்வழி கூறும் யோகசாஸ்திரத்தையும் அதனைப்பழகும் கிரமத்தையும் மிகவிரிவாய். எழுதியிருக்கிறார்கள். மேலும் மனுடஜீவியத்தில் நேரிடும் கவலையும் பெருமூச்சும் தூக்ககாலத்திலும் கோபகாலத்திலும் மோககாலத்திலும் நேரிடும் குறுமூச்சும் சுவாசத்தின் எண்களை அதிகப்படுத்தி நாட்களைக்குறைக்குமானதினால் அவைகளை முற்றிலும்வெறுத்து மடைவாயிற்பறவை போல் பிராணாயாமத்தில் கவலைவைத்து அதேதவசாகக் கொண்டார்கள். அவர்கள்செய்த தவசின்பலனாகச் சாதாரணமனிதர்களைப் பார்க்கிலும் நீண்ட ஆயுளுள்ளவர்களாக இருந்தார்களென்று அறிவோம். ஓம் என்ற அட்சரத்தை ஒரு மாத்திரையாக வைத்துக்கொண்டால் இரண்டு மாத்திரைகாலம் மூச்சுவாங்கி நாலுமாத்திரைகாலம் மூச்சைக்கும்பித்து ஒருமாத்திரைகாலம் மூச்சை விட்டுப் பழகும்படிச் சொன்னார்கள். இக்கணக்கின்படியே இதன் இருமடங்காகவும் படிப்படியாய் மேலேபோக வேண்டுமென்று பல விதிவகைகள் ஜெபங்கள் அமைத்துச் சொல்லிவைத்தார்கள். “நடக்கையிலும் இருக்கையிலும் வாசிபாரு” என்று சொல்லியதற்கிணங்கச் சிறு முறைகளும் சொன்னார்கள். யாவரும் பொதுவாக மூச்சுவாங்கு வதையும் விடுவதையும் அறிவோம். நடுவில் கும்பித்து நிற்பது நமக்கு வழக்கத்திலில்லை. ஆகையினால் முதல் முதல் ஓம் என்ற அட்சரத்தின் அளவாக மூச்சுவாங்கி அவ்வட்சரத்தின் காலஅளவாக மூச்சுவிடும் ஒருவன் அவ்வளவு நடுவில் கும்பித்து நின்று பழகவேண்டும். அதன் பின்பே படிப்படியாக மாத்திரைகளை ஒவ்வொரு வகைக்கும் கூட்டிக்கொண்டு போகவேண்டும். முதல் சாதனையாக மூன்று பாகத்தையுடைய காயத்திரி மந்திரத்தை ரேசக, பூரக, கும்பகம் என்னும் மூன்று வழியிலும் சொல்லிப் பழகவைத்தார்கள். இதன் இரகசியம் தெரியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு வாய்திறந்து மந்திரங்களைச் சொல்பவர்கள் இதன்பலனை எப்படி அடைவார்கள்? இரகசியம் தெரிந்தால் சாதிக்கக் கூடியவர்கள் அநேகர்,

ஒருநாளைக்கு 108 காயத்திரி சொல்லுகிறவன் பிதுர் தேவதைகளால் கொண்டாடப்படுகிறவனாய் இருக்கிறான் என்பதை நாம் கவனிப் போமானால் ஒருவன் ஒருநாளில் சுவாசிக்க வேண்டிய 21,600 சுவாசத்தையும் படிப்படியாகக் குறைத்து அப்பியாசித்து 200 சுவாசத்தின் அளவாகச் செய்யும் பொழுது ஒரு நாளைக்கு 108 சுவாசமாகிறது. அதாவது ஒருநாளை 200 நாளாக மீதம் பண்ணிக் கொள்ளுகிறான். அப்படியானால் ஒரு வருடத்தை 200 வருடமாகவும் விருத்திசெய்து கொள்ளுகிறான். இதைப்பற்றியே,

“நூறிலேறு போதிலாறு கேணியாகும் விந்தடா
நூறு நூறு சேருமாகின் மாரிபெய்யு மாறடா
வேறுமீச னேதுஞான வீதியேறு போதிலே
வேதனாளு மாயனாளு மீசனாளும் வாசமாய்
கூறுநாவ தேதடாசொன் மூல நாடி யூதவே
கோணமாமூ வாச லேறப் பாழின் மீதி லேறடா
சரடா கணேசர்பாத கேசராதி வீதியிற்
சாருசேரு தாரக சதாசிவாய பிரம்மமே”

என்று பதஞ்சலிமுனிவர் சொல்லியிருக்கிறார். இம்மகத்தான யோகநிலையைச் சாதித்த பெரியோர் யாவற்றையும் விட்டவர்களாய்க் காணப்பட்டாலும் யாழையும் யாழின் இனிய கானத்தையும் விடவில்லை. தாங்கள் வாசியோகம் செய்து அதிக சூடுண்டாகும் காலத்தில் யாழ்வாசித்து