அவ் வினிய பண்ணால் தியானநிலையில் பழையபடியும் கூடுவார்கள். ஆரோகண, அவரோகணமாய்ச் சொல்லும் ஏழு சுரங்களிலும் பல ரவைஜாதிவரிசைகள் சொல்லும் பொழுதும் இயற்கையின் அமைப்புக்குமிஞ்சி ரேசிக்கவும் பூரிக்கவும் கும்பிக்கவும் நேரிடுகிறதென்று நாம் அறிவோம். மட்டுக்கு மிஞ்சிக்கும்பிப்பது தேகத்தின் சில இடங்களை வீங்கவும் வெடிக்கவும் செய்கிறதென்று நாம் அனுபோகத்தால் அறிவோம். அப்படி யில்லாமல் தான் இயற்கையாய்ச் சுவாசிக்கும் சுவாசகாலத்தின் அளவுக்குப் பத்துமடங்கு அளவுக்கு மேற்படாமலிருக்க வேண்டுமென்றும் பாடுவதில் காலம் தள்ளிக்கொண்டு போகப்போக அட்சரங்கள் தெளிவாகத் தெரியவேண்டும் மென்பதற்காக நாம் சுவாசிக்கும் 21,600 சுவாசத்திற்குப் பத்திலொன்றாக ஓசையின் அலைகளிருக்கவேண்டுமென்றும் சொல்வது பொருத்தமாயிருக்கிறது என்று எண்ணுகிறேன். ஆதாரசட்சத்திற்கு மேல் இரண்டு ஸ்தாயிகளும் கீழ் மந்தர ஸ்தாயியும் ஆக மூன்று ஸ்தாயிகளிலேயே தற்காலம் நாம்கானம் பண்ணக்கூடியது. இம்மூன்று ஸ்தாயிகளிலும் மந்தர ஸ்தாயியில் 4 சுரங்களும் மத்திய ஸ்தாயியில் 7 சுரங்களும் தாரஸ்தாயியில் கைக்கிளை வரையுள்ள 3 சுரங்களும் ஆக 14 சுரங்களிலேயே தற்கால கானமிருப்பது போவே இதற்கு முன் பல்லாயிர வருடங்களாகப் பூர்வதமிழ்மக்கள் கானத்திலும் 14 கோவை கானம்செய்யப்பட்ட தென்று அறிகிறோம். இதையே 5ம் நூற்றாண்டிலிருந்த பரதர் 14 சுருதிகள் பூலோகத்தில் கானம் பண்ணப்பட்டு வருகிறதென்று சொல்லுகிறார். மிக அவூர்வமாகச் சிலர் மாத்திரம் மூன்று ஸ்தாயிகளிலுள்ள 21 சுரங்களையும் கானம் பண்ணுவார்கள். இதற்குமேல் அதாவது தாரஸ்தாயிக்கு மேலும்மந்தர ஸ்தாயிக்குக் கீழுமாக சில தந்திவாத்தியங்களில் வரக்கூடியதாயிருந்தாலும் மக்களால்கானம் செய்யப்படுவது இந்த மூன்று ஸ்தாயிகளுமானதினால் இதற்குமாத்திரம் ஓசையின் அலைகள் நிதானிக்கலாம். அதற்குமேலும் கீலும் வரும் சுரங்களுக்கு முறையே இருமடங்காகக் கூட்டியும் பாதியாகக்குறைத்தும் கொள்ளலாம். இது விஷயத்தில் நான் உத்தேசமாய்ச் சொல்வதாயிருந்தாலும் அண்டத்திற் கொத்தது பிண்டத்திலும் இப்பிண்டத்தின் அளவே யாழிலுமிருக்க வேண்டுமென்ற முன்னோர்களின் அபிப்பிராயத்தின் படியே இப்படிச் சொல்லநேரிட்டது. ஆகையினால் ஆதாரட்சம் 540 என்றும் மத்தியஸ்தாயின் முடிந்த சட்சம் 1080 என்றும் தாரஸ்தாயி முடிந்த சட்சம் 2160 என்றும் நான் வைத்துக் கொண்டு இதன் முன் கணக்குச் சொல்லியிருக்கிறேன். இதுபோலவே மேருமுதல் மெட்டுவரையுள்ள யாழின் நீளமும் மனுடசரீரமும் அவரவர் கைக்கு நாலு சாணாகிறது. என் கைக்கு ஒருசாண் 8 அங்குலமாக 4 சாணும் 32 அங்குலநீளம் அல்லது 48 விரற்கடை என்று கணக்கிட்டு 32 அங்குல நீளமென்று யாழின் தந்தியை வைத்துக் கொண்டு இதன் முன் கணக்குகள் சொல்லியிருக்கிறேன். மேலும் 32 அங்குல தந்தியின் பாதி 16 அங்குலமாகும். அப்பதினாறு அங்குல நீளத்தின் ஆதாரசட்சம் நிற்க மத்தியஸ்தாயி சட்சம் வரையுள்ள சுரங்களுக்கும் சுருகிளுக்கும் நுட்பமான கருதிகளுக்கும் அளவும் கணக்கும் சொல்லியிருக்கிறேன். இதனால் அவரவர் அளவின்படியே யாழ் செய்யப்படவேண்டு மென்றும் சுரஸ்தானங்கள் அமைக்கப்படவேண்டு மென்றும் அதுவே வாசிப்பதற்கு கைக்கு அனுகூலமாயிருக்குமென்றும் அப்படியில்லாதது அனுகூலமாயிருக்காதென்றும் தெளிவாய்த் தெரிகிறது. தன் அளவுக்கு அதாவது தன்கைக்கு 4 சாணுக்கு மிஞ்சின யாழில் வரும் சுரஸ்தானங்கள் தன்விரலால் பிடிக்கக்கூடிய அளவுக்குமிஞ்சியிருக்கும். குறுகிய விரல்களுக்குச் சரியானசுரம் பிடிப்பது கஷ்டமாயிருக்கும். அப்படியே 4 சாணுக்குக்குறைந்த யாழிலும் சுரஸ்தானங்கள் சரிவரப் பேசாது. இனியஓசையும் நுட்பமான சுருதிகளும் பேசப்பட வேண்டுமானால் அவரவர் கை அளவிற்குத் தகுந்தவிதமே யாழுமிருக்கவேண்டும்.
|