பக்கம் எண் :

817
பூர்வம் தமிழ் மக்கள் பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்களென்பது.

5. தமிழ் மக்கள் பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்களென்பது.

பூர்வம் தமிழ்மக்கள் இசைத்தமிழிலும் மற்றும் கலைகளிலும் இவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்களா என்று நினைப்போம். அகத்தியமாமுனிவர், திருமூலர், சட்டமுனி, மச்சமுனி போன்ற மகான்கள் வைத்தியம், வாதம், யோகம், ஞகானம் என்னும் நாலு கலைகளிலும் வெகு நுட்பமான காரியங்களை அங்கங்கே சொல்லியிருக்கிறார்களென்று தமிழ்மக்களில் பலரும் அறிவார்கள். இந்நாலு கலைகளிலும் சிறந்ததான வாதம் யோகம் என்னும் இரண்டிற்கும் ஒற்றுமையால் ஒரு பெயரிட்டு வழங்குவதையும் காண்போம். அகத்தியர் பரிபாடை ஐந்நூறில் பிர்ம உப்பின் பெயர் சொல்லுமிடத்து தூலதத்துவங்களின் எண்களின்படி்அமைந்த 1, 2, 3, 4, 5, 7, 10, 25, 96 பெயர்களைச் சொல்லுகிறதைக் காணலாம்.

இப்படியே சோதிடத்திலும் இதைப்போலொத்த அருமையான கணக்குகளையே உபயோகித்து வந்திருக்கிறார்களென்று பல முகமாக நாம் பாரக்கிறோம். பூர்வ தமிழ் மக்கள் மிகப்பயின்றுவந்த மனையடி (சிற்ப) சாஸ்திரத்தின்படி தமிழ் நாட்டில் நாம் காணும் பென்னம் பெரிய சிவாலயங்கள். அவற்றில் அமைந்திருக்கும் உருவங்கள். கல்வேலைப்பாடுகளுள்ள கட்டடங்களையும் இங்கே நினைக்கவேண்டியதாயிருக்கிறது. கோவிலையும் கோவில் சுற்று மாளிகைகளையும் (பிரகாரம்) நாம் கவனிப்போமானால் அவைகள் யாவும் நமது தூல சரீரத்தின்அளவின்படியே கட்டப்பட்டிருக்கின்றனவென்று நாம் அறிவோம். கழுத்தின் சற்றளவைக் கொண்டு சட்டை தைக்கும் ஒரு மேஸ்திரியைப்போல கட்டைவிரலின் சுற்றளவைக்கொண்டு ஒரு மனிதனுடைய உருவத்தை எழுதினார்கள். நீரில் ஓடும் ஒரு தலை மயிரின் தன்மையையும், அளவையுங்கொண்டு அதனையுடைய பெண்ணின் வடிவத்தைச் சித்திரித்தார்கள். இன்னும் இவை போன்ற கணக்குகளும் அவைகளைப்பற்றிச்சொல்லும் கலைகளும் தமிழில் விரிவாக இருந்ததாகத் தெரிகிறது.

ஓம் என்ற மவுன எழுத்திற்கும் நமசிவய என்ற ஐந்து எழுத்துக்களில் ஒவ்வொன்றிற்கும் பல குழுஉக்குறியான பெயர்கொடுத்து வழங்கி வந்திருக்கிறார்கள். திருஷ்டாந்தரமாக ஓம் என்ற அட்சரத்தை யகாரம் என்றும் வைத்தம் என்றும் தழ்தம் என்றும் மதுகழஞ்சம் என்றும் நாவ ழதமென்றும் உபநிகழ்த மென்றும் பதிழ்கார மென்றும் பெயரிட்டும் நகாரத்தைப் பிரமழா என்றும், சதுரமென்றும், நிசாரழமென்றும், தாராழதகமென்றும், விந்துழாமென்றும், விழா சழசமென்றும், காலாவிதமென்றும், சிகாரத்திற்கு ருத்திராங்கமென்றும், சிவராங்கமென்றும் நடுவணைப்பதி யென்றும், விழைச்சாபாசரிக மென்றும், தாயடாகமென்றும், நோன்புரமென்றும், நாதபாதமென்றும், நிறுவி என்றும் இன்னும் இவைபோன்ற எழுத்துக்களுக்கும் தத்துவங்களுக்கும், சோதிட சம்பந்தமானவைகளுக்கும் பச்சிலைகளுக்கும், லோகங்களுக்கும், 120 உபரசங்களுக்கும் (உலோகங்களுக்கும்.) நவபாஷாணங்களுக்கும், சீனச்சரக்கு 64 க்கம் நடப்பன, பறப்பன, ஊர்வன முதலிய சீவசெந்துகளுக்கும். புல்பூண்டு முதலிய தாவரங்களுக்கும் வெவ்வேறு பெயரிட்டு அவற்றின் உபயோகவிபரம் சொல்லி வழங்கி வந்திருக்கிறார்களென்பதை அவர்கள் எழுதிய நூல்களால் அறிகிறோம்.

நிலம், நீர், தீ. வளி, வான் என்ற பூதங்களின் பெயர்களையும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளின் பெயர்களையும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புலன்களின் பெயர்களையும் நாம் உற்று நோக்குவோமானால் எழுத்துக்களின் சுருக்கமும் ஓசையின் இனிமையும் வார்த்தைகளின் அழகும் தமிழ் மொழிக்குச் சிறந்திருக்கிறதென்று அறிவோம். இதிலும் மேலாக அநேக அரும்பதங்களும் தத்துவ மொழிகளும் சங்தேகச் சொற்களும் வர வர மறைந்து அந்நிய பாஷைகளின் சொற்கள் வழங்கிவருகின்றன. பூர்வம் தமிழ்