பக்கம் எண் :

825
பன்னிரு இராசிகளில் வரும் ஏழ சுரங்களப்பற்றிய பொக்குறிப்பு

இவ்விரு முறைப்படியும் இதற்கு முன் சுருதிகளைப்பற்றிச் சொல்லிய கனவான்களின் கணக்கு சரியல்லவோ என்று நாம் நினைப்போம்.

சாரங்கதேவர் சுருதிகளைக் கண்டுபிடிக்கும் முறையிலும் சுரங்களின் இயக்க (ஸ்தாயி) முறையிலும் மிகச் சரியாக அதாவது Geometrical Progression படி கணித்திருக்கிறார் என்றும் அதின்படியே கிரக மாறும் முறை சொல்லுகிறார் என்றும் அறிகிறோம்.

ஆனால் ஒரு ஸ்தாயியில் விளரி கைக்கிளையில் 2 அலகு குறைந்து 22 அலகுகளில் பாடுகிறதென்ற பூர்வ தமிழ் மக்களின் பழக்கத்திலிருந்த 22 அலகுகள் என்று சொல்லாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் இருக்கிறதென்று சொல்லி அதை அனுசரித்து சுரங்களின் பெயர்கள் இராக லட்சணங்கள் சொல்லியிருக்கிறார். ஒரு ஸ்தாயியை 22 சுருதிகளாகப் பிரிப்போமானால் மத்திமமும் பஞ்சமமும் கூட சரியான அளவில் வரவில்லை என்று கணக்கினால் தெளிவாய்த் தெரிகிறது.

ஆனால் மற்றவரோ சாரங்கரின் உத்தமமான சுருதி முறைப்படி போகாமலும் சாரங்கர் சொல்லுகிற 22 சுருதிகள் என்ற வார்த்தையை விடாமலும் யாழில் (வீணையில்) காணப்படும் மத்திம பஞ்சமங்களை அளந்து 2/3என்றும் 3/4என்றும் கண்டுபிடித்து ஒன்றோடொன்று பெருக்கி 22 சுருதிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் கணக்கில் ஏதாவது இரண்டு பெயருடைய கணக்காவது ஒற்றுமையாய் வரவில்லை.

இதனால் யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு முறை இருக்கிறதா வென்று விசாரிக்கவும் அதை எடுத்துக்காட்டவும் வேண்டியது அவசியமாயிற்று.

தென்னிந்திய சங்கீதத்தை அறிவதற்குப் பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த இசை நூல்களின் சில வரிகளின் சாரத்தைக் கவனிப்போமானால் சுரங்கள் இணை, கிளை, நட்பாகப் பொருத்தி இராகங்களில் வரவேண்டுமென்றும் குரல் இளி கிரமத்தில் சுரங்கள் அமைக்கப்பட்டிருந்த தென்றும் வட்டப்பாலைமுறையில் சுருதிகள் இருபத்துநான்கு என்றும் தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. வட்டப்பாலை முறைப்படி வழங்கிவந்த அலகுகள் 1, 2, 3, 4 ஆகப்போவதையேசாரங்கதேவர் சுருதிகள் ஒன்றற் கொன்று தீவிரமாய்ப் படிப்படியாய் உயர்ந்து நடுவில் வேறு நாதம் உண்டாகாமல் ஒரு ஸ்தாயியில் முடிகிறதென்று சொல்லுகிறார்.

"மிட்றும் என்பது மூலாதாரம் தொடங்கிய மூச்சைக் காலால் எழுப்பி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப்பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பிக்கப்பட்ட பாடலியலுக்கமைந்த மிடற்றுப்பாடலும்" என்று பூர்வதமிழ் மக்கள் வழங்கிவந்த இயக்க (ஸ்தாயி) முறையையே சாரங்க தேவர் மந்தரஸ்தாயி ஒன்றானால் மத்தியஸ்தாயி அதன் இருமடங்காயிருக்கவேண்டும் என்றும் தாரஸ்தாயி அதன் இருமடங்காயிருக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார். ஒன்றெனத்தாக்கி இரண்டெனப்பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பிக்க என்று சொல்வதைக் கவனிப்போமானால் ஒன்றுக்கிரண்டாகவும் இரண்டுக்கு அதற்கு இரண்டாகவும் (நாலாகவும்) மந்த சம உச்சம் என மூவகை இயக்கும் வருகின்றனவென்று தெளிவாகத்தெரிகிறது.

இரண்டாவது மேற்றிசையோரும் இந்திய சங்கீதத்தின் சுருதிகளைப்பற்றிச் சொல்லும் மற்றவரும் ச-ப2/3, ச-ம3/4 என்ற அளவின்படி தந்தியில் வருகிறதென்றும் இம்முறையே ஒரு ஸ்தாயியில் சுரங்கள் வரவேண்டுமென்றும் ஏகவாக்காய்ச் சொல்வதை அனுசரித்துச் சுருதிகள் நிச்சயப்படுத்தவேண்டும். இவ்விஷயத்தைச் சற்றுக் கவனிப்போமானால் 2/3, 3/4 என்ற அளவுமுறை பூர்வ தமிழ் நூல்களிலாவது பரதர் சாரங்கர் எழுதிய நூல்களிலாவது காணப்