பக்கம் எண் :

827
ஒரு ஸ்தாயியில் வழங்கி வரும் ஏழு சுரங்களப்பற்றி.

2. ஒரு ஸ்தாயியில் வழங்கி வரும் ஏழு சுரங்களைப்பற்றி.

இசைத்தமிழில் வழங்கி வரும் ஏழு சுரங்களும் பூர்வம் தமிழ் நாடென்றழைக்கப்பட்ட நாவல்தீவு, இரலித்தீவு, குசைத்தீவு கிரவுஞ்சத்தீவு, புட்கரத்தீவு, தெங்குத்தீவு, கமுகுத்தீவு என்ற ஏழு தீவுகளிலிருந்து உண்டானதாகச் சொல்லப்படுகிறது. அதோடு அவைகள் ஏழு முனிவர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏழு தீவுகள் அடங்கிய தமிழ் நாட்டிலே ஏழு சுரங்களும் உண்டாயிற்றென்று நாம் நினைக்க இடமிருக்கிறது. இதையே சாரங்கரும் ஜம்புத்தீவு, சாகத்தீவு, குசத்தீவு, கிரவுஞ்சத்தீவு, சால்மலித்தீவு, சுவேதத்தீவு, புஷ்கரத்தீவு என்ற ஏழு தீவுகளிலிருந்து ஏழு சுரங்களுண்டானதாகச் சொல்லுகிறார்.

தக்க விபாஷாதேவார வர்த்தனி, மாளவ சைகிக தேவாரவர்த்தனி, பின்னஷட்ஜ விபாஷாதேவாரவர்த்தனி, தக்ஷணகுச்சரி, திராவிடி, திராவிடகுச்சரி, திராவிடிபாஷா சோமராகம் தக்ஷணாத்தியாபாஷா, சுத்தபஞ்சமம் தக்ஷணபாஷங்கம் என்று தமிழ் நாட்டில் வழங்கி வந்த பண்களைச் சொல்வதுபோலவே தமிழ் நாடென்றழைக்கப்பட்ட நாவல்தீவு, இரலித்தீவு, குசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, புட்கரத்தீவு, தெங்குத்தீவு, கமுகுத்தீவு என்ற ஏழு தீவுகளிலிருந்து ஏழு சுரங்களும் பிறந்தனவென்று சொல்லுகிறார். அத்தீவுகளில் நாம் வசிக்கும் இந்தியாவும் ஒன்று. இதுவே நாவல் தீவு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் தென்புறத்தில் தென்மதுரையிருந்த ஒரு பெரும் பகுதி கடலால் அழிந்துபோனதென்றும் இமயமலைவரை தமிழ் நாடு பரவியிருந்ததென்றும் தென்றமிழ் நாட்டிற்குத் தென் எல்லையாயிருந்த குமரிக்கோடும் வடிம்பலம்பநின்ற பாண்டியனால் வெட்டப்பட்ட பஃறுளியாறும் கடலால் கொள்ளப்பட்டனவென்றும் அறிவோம்.

அத்தீவுகளி அவற்றில் மிகுதியாக இருந்த பொருள்களினால் இப்பெயர்கள் பெற்றனவென்று காண்கிறோம். நாவல் மரங்கள் மிகுந்திருந்த தீவு நாவல்தீவு என்று அழைக்கப்பட்டது. இரலித்தீவு, இத்திமரங்கள் அதிகமாயிருந்ததினால் இப்பெயர்பெற்றது. குசைத்தீவிற்கு, தருப்பை அல்லது நாணற்புல் மிகுந்திருந்ததினால் இப்பெயர் வந்தது. கிரவுஞ்சத்தீவு அன்றில் என்ற நீர்ப் பறவைகள் மிகுதியாயிருந்த தினிமித்தம் அப்பெயரால் அழைக்கப்பெற்றது. யானைகள் மிகுந்திருந்ததீவு புட்கரத்தீவென வழங்கிவந்தது. தெங்குத்தீவிற்குத் தென்னைமரங்கள் அதிகமாயிருந்தினால் அப்பெயர் சொல்லப்படுகிறது. கமுகுத்தீவு பாக்கு மரங்கள் அதிகமாயிருந்ததினிமித்தம் அப்பெயரால் அழைக்கப்பட்டது. இவ்வேழு வகையான பொருள்களும் தென்னிந்தியாவின் தென்புறமாயுள்ள இந்து மகா சமுத்திரத்தின் கரையோரங்களில் இன்றைக்கும் காணப்படும் பொருள்களாக இருக்கின்றனவென்று காண்போம். மேலும் இவ்வேழு பொருள்களும் தென்னிந்தியாவில் மிகுந்திருப்பதையும் காண்போம்.

ஆகையினால் தென்னிந்தியாவின் தென் புறத்திலுள்ளதான தென்மதுரை நாடேமிகுந்த விசாலமுடையதாயிருந்ததென்றும் முக்கியமான நாடாயிருந்ததென்றும் அதில் பாண்டிய அரசர்களே முதன்மை பெற்றிருந்தார்களென்றும் தமிழ்மொழியே இவ்வேழு தீவுகளிலும் பேசப்பட்டு வந்ததென்றும் தெளிவாகத் தெரிகிறது.

இத்தீவுகளில் அரசாண்டுவந்த மன்னர்களிற் சிறந்தோர் தவம் செய்து இராஜரிஷியாய் விளங்கினார்கள் என்றும் முனிவர்களானார்களென்றும் மனுக்களானார்களென்றும் காண்கிறோம். தென்மதுரைக்கரசனாகிய (திடாவிடதேசத்தரசனாகிய) சத்தியவிரதன் வைவசுதமனு ஆனான்