என்று பாகவதத்திற் சொல்லியிருப்பதை இப்புத்தகத்தின் 18, 19-ம் பக்கங்களில் காணலாம். அவர்களால் காலா காலாங்களில் ஒவ்வொரு சுரமாகக் கண்டு பிடிக்கப்பட்டு ஒரு ஸ்தாயியிலுள்ள ஏழு சுரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட தென்று எண்ண இடமிருக்கிறது. ஜலப்பிரளயத்தில் தப்பிப் பிழைத்த நோவாமுனிவரால் அவர்க்குப் பின்னுள்ளவர் உலகத்தில் விருத்தியானது போலவே ஜலப்பிரளயத்திற்குத் தப்பி வடநாட்டிற்குச் சென்ற தென்மதுரைக்கு அரசனாகிய சத்தியவிரதனால் இந்தியாவின் ஜனங்கள் உற்பத்தியானார்கள் என்றும் அவருடைய காலக்கணிதத்தின்படி 23 சதுர்யுகங்களாகி இப்போது 24வது சதுர்யுகத்தில் கலியுகமென்றும் அதில் 5015 வருடங்களாயிற்றென்றும் சாதாரணமாய்ச் சொல்லப்படுகிறது. இக் கணக்கை நாம் திட்டமானதென்று ஒப்புக்கொள்ளாமற் போனாலும் லெமூரியா என்று அழைக்கப்படும் தென்றமிழ் நாட்டில் அரசாட்சிசெய்து கொண்டிருந்த தென்மதுரைக்கரசனாகிய பாண்டியனும் அவன் வம்சத்தாரும் இந்தியாவின் பூர்வகுடிகளாய் மேன்மை பெற்று விளங்கினார்களென்று ஒப்புக்கொள்வதில் எவ்வித ஐயப்பாடு மில்லை. ஏழு தீவுகளுக்கும் ஏழு சுரங்கள் சொல்லப்படுவதுபோலவே ஏழு தீவுகளின் உட்பிரிவாகிய ஏழு நாடுகளுக்குத் தகுந்த விதமாய் ஒவ்வொரு சுரத்திற்கும் எழு சுருதிகள் வழங்கி வந்ததாகவும் தெரிகிறது. இதன் விபரம் யாவும் இரண்டாம் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லப்படும். ஏழு என்ற சொல் எப்படித் தமிழில் மாத்திரம் சொல்லக்கூடிய சிறப்பெழுத்துடையதாயிருக் கிறதோ அப்படியே ஏழு என்ற இலக்கத்தினால் குறிக்கப்படும் பொருள்களும் தமிழ் நாட்டிற்கே சிறந்தவையென்றும் முதல் முதல் தமிழ் நாட்டிலேயே வழங்கி வந்தனவென்றும் சொல்லலாம். தமிழ்மக்கள் வழங்கிவந்த கலைகள் யாவற்றுள்ளும் இவ்விலக்கத்தை மிகுந்து உபயோகித்திருக்கிறார்களென்பதைத் தெளிவாகக் காண்கிறோம். ஏழுஇசை, யாழின் ஏழு நரம்பு, ஏழு கிரகங்கள், ஏழுகிழமைகள், ஏழுபண்கள், ஏழுவங்கியம், ஏழு வகைத்தோற்றம், ஏழுதீவுகள், ஏழுநாடுகள், ஏழுதாளம், ஏழுதாதுக்கள், சூரியனின் ஏழுகுதிரைகள், ஏழுகடல்கள், ஏழுஉலகங்கள், ஏழு பருவங்கள், ஏழுபாலைகள், ஏழுகண்டங்கள், ஏழுமாதர்கள், ஏழுமுழவுகள், ஏழுமுனிவர்கள், ஏழு மேகங்கள், ஏழுவள்ளல்கள் என்ற வார்த்தைகளைக் கவனிப்போமானால் சங்கீதம் சோதிடம், இலக்கணம், வேதாந்தம் முதலியவைகளுக்குச் சம்மந்தமாக வழங்கி வந்த வார்த்தைகளென்று நாம் அறிகிறோம். இதில் ஏழு சுரங்களையும் ஏழு தாளங்களையும் ஏழு பாலைகளையும், ஏழு முழவுகளையும் ஏழு வங்கியத்தையும் ஏழு பண்களையும் யாழின் ஏழு நரம்புகளையும் முற்றிலும் சங்கீதத்தில் வழங்கிவருகிற கணிதமுறை யென்று காண்போம். தமிழ்நாடு ஏழு பெருந்தீவுகளாக இருந்ததென்றும் இதன்முன் பார்த்திருக்கிறோம். அம்முறைக்கு இணங்கவே எவ்வேழான இக்கணக்குகள் வழங்கி வந்திருக்கிறதென்று தோன்றுகிறது. இன்னும் அநேக கணக்குகள் ஏழு என்னும் இலக்கத்தில் வருகிறது. ஏழு என்ற சுரங்கள் எந்தெந்த அளவோடு வருகின்றனவென்று நாம் இப்போது பார்க்கவேண்டியது அவசியம். வான மண்டலத்தை எப்படி பன்னிரண்டு இராசிகளாய்ப் பிரித்து அதில் ஏழு கிரகங்களின் சஞ்சாரம் சொன்னார்களோ அப்படியே ஒரு ஸ்தாயியை பன்னிரண்டு பாகங்களாகப் பிரித்து அதில் ஏழு சுரங்களில் சஞ்சாரக் கிரமம் சொன்னார்கள். ஆகையினால் ஒரு ஸ்தாயியில
|