பக்கம் எண் :

96

சென்னை கவர்ண்மெண்டு மாதர் கலாசாலைத் தமிழ்ப்போதகாசிரியர் மகா---ஸ்ரீ
C. R. நமச்சிவாய முதலியார் அவர்களின் அபிப்பிராயம்.

C. R. Namasivaya Mudaliar‘Kaveri House’
Lecturer in Tamil130, Govindappa Naick St.,
Madras College for Women.Madras, E.

வலம்படச் சுழலும் வரிவடிவு வாய்ந்து தனித்தியங்கும் வன்மை பெற்று என்றும் இளமை மாறாது விளங்கி நிற்கும் நந்தம் தமிழ் மொழி தொன்று தொட்டு இயல், இசை நாடகம் என்னும் முத்திற அமைப்பினைக் கொண்டதோர் முதுமொழியாகும். உற்று நோக்கின் அவை ஒன்றினொன்னு இயைந்து முறையே உயர்வுற விளங்குவதென்பது நன்கு புலனாகும். என்னை, இசைத்தமிழுக்கு இயற்றமிழும் நாடகத்தமிழிக்கு ஏனைய இரண்டு தமிழும்இன்றியமையாதனவன்றோ?

இப்பகுதிகள் இயற்றிமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என வழங்குமாற்றால் தமிழ் மொழியே மூன்று வகையாக மாறுபட்டதெனக் கருதுவார் பலர். அவை தமிழியல், தமிழிசை, தமிழ் நாடகம் எனத் தமிழியலும் இசையும் நாடகமும் ஏனைய மொழிப் பகுதிகளுக்கு மாறுபட்டு விளங்கும் திறத்தைக் குறித்தற்குப் போந்த தொடர்களேயாமென்க. இங்ஙனம் விதந்து கூறுதற்குற்ற காரணம் என்னையோவெனின், ஆரிய இயலும் ஆரிய இசையும், ஆரிய நாடகமும், தமிழ் நாட்டின்கண் வந்து கலந்த காலத்தே தமிழ் மக்கள் அவற்றைப் போற்றி மேற்கொண்ட காலத்தே அவற்றின் இவை வேறாமென்பதை உணர்த்தற் பொருட்டேயாமென்க. ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு’ என்னும் பழமொழியும் அதனை வலியுறுத்தும். வடமொழி என்பதற்கு மாறாகத் தென்மொழி என்பதும் ஆரிய மறை என்பதற்கு மாறாகத் தமிழ் மறை என்பதும் வழங்கிவருகின்றனவன்றோ?

இனி நாளடைவில் இயற்றமிழ் ஒன்றும் நிலைத்து நின்று, ஏனைய இரண்டும் இறந்து பட்டன. அவை இறந்து பட்டமைக்கு பலர் பல காரணங் கூறுவர். கூர்ந்து நோக்கின் மாந்தரது வாழ்க்கைக்கும் நிலைக்கும் நாகரிகத்திற்கும் இயற்றமிழ் இன்றியமையாதது. இசை நாடகங்களோ வெனின் அவரது மகிழ்ச்சிக்கும் மனோல்லாசமான காலப்போக்கிற்கும் கருவியானவை. நாடெங்கும் செழித்து நலம் பரவிய காலத்தினே பாட்டுங் கூத்தும் எங்கெங்கும் பரந்து விளங்கும். நந்தம் நாட்டில் நாளேற வந்த வறுமைப் பிணியும் அரசியல் மாற்றமுமே அவை இறந்து பட்டமைக்குக் காரணங்களாகும். இதுவேயுமன்றி, தமிழர் ஆரிய மொழியை மேற்கொண்டு அவர்தம் மதங்களையும் கொள்கைகளையும் கைப்பற்றி சின்னாளின் பின்னர் தாமும் ஆரியரே எனக்கூறப் புகுந்த அவ்வழிச் செய்கையானே ஆரியரது இசை நாடகங்களைப் பெரிதும் போற்றி தமக்குற்ற இசை நாடகங்களைக் கைநழுவவிட்டுக் கருதாதிருந்தமையே ஏற்றகாரணமென்னலாம். கூத்தென்னும் தமிழ் மொழியை ஒழித்து நாடகமென்னும் ஆரியமொழி இத்தொடர்களில் இடம் பெற்றதும் இதற்குச்சான்றாகும்.

இனிப் பண்டைத் தமிழ் நூற்களில் காணும் இசைகளும் இசைக்கருவிகளும் இத்தகைய வென்று புலப்படுவதில்லை. அந்தோ, அவற்றிற்கூறும் மரங்களேனும் தெரிகின்றனவா? மலர்களேனும் தெரிகின்றனவா? ஏதுமில்லையே. பொருள்களை உணர்த்தக் கருவிகளா நிற்கும் சொற்களை உணர்கின்றோமன்றி அவை யுணர்த்தும் பொருள்களை உணர்ந்தோமில்லையே ! இவ்வின்னல் தீர எத்தெய்வம் எதிர் நின்று வழிகாட்டுமோ ! இக் காலத்தே தமிழ் மறைகளில் காணும் பண்களின் இசைத்திறமும் பளிங்குபோல் தெரிந்தபாடில்லையே !

உரையாசிரியர் காலத்திலேயே இறந்து பட்டன இசை நாடகத் தமிழ் நூல்கள் எனின், இந்நாளில் எவற்றைக்கொண்டு அவற்றை ஆராய்வது? ஆழியிலுள்ள அரியமணிகளை மூழ்குதற்கான கருவி ஒரு சிறிது மின்றி உயிரைத் துரும்பாக எண்ணி அவ்வாழியின் கண் மூழ்கி அம்மணியை எடுத்துக் கடைந்து உலகிற்களிக்கும் உயர்குணமும் மனவன்மையும் வாய்ந்த மானிடனேபோல் வளங்குன்றாத வள்ளியோனும் செந்தமிழ்ச்