செல்வனும் அருங்கலை விநோதனும் உண்மைதேரும் உத்தமனும் அறிஞரை போற்றும் ஆண்டகையும் நல்லியல் வாய்ந்த நண்பனும் ஆகிய ஒருவன் வேண்டும். அன்னவனே இத்தகைய அரிய செய்கையை அமைவுற ஆற்றிடவல்லான். இதற்குத் தஞ்சை ராவ்சாகிப் ஆபிரகாம் பண்டிதர் என்னும் அண்ணலைக் கூறவே என் உள்ளம் ஒருப்படுகின்றது. நந்தம் பண்டிதர் இயற்றிய ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் இசைத்தமிழ் நூலைச் சிற்சில இடங்களில் படித்துப்பார்த்தேன். பண்டைத்தமிழ் நூல்களில் ஆங்காங்கே அருகிக்கிடக்கும் விஷயங்களைத் திரட்டி அவற்றிற்கு ஆதரவான அமிசங்களைக் கூட்டி ஐயமற விளக்கியிருக்கின்றனர். தம் மதம் நிறுவப் பல அறிஞர்கள் கூறிய அடைவுகளையும் மேற்கோள்களையும் பிறநாட்டினர் கூறும் அமைதிகளையும் தடைவிடைகளாற் காட்டுகின்றனர். இசைநூற்பயிற்சியுடையாரே துணிந்து கூறுவதற்கான விஷயங்களைப்பற்றி யான் ஏதுங் கூறதற்கில்லேன். இசையைப்பற்றிய விஷயங்கள்யாவும் ஒருங்கே ஓரிடத்திற்காணுமாறு, காண்போர் கண்ணையும் மனத்தையும் கவரும்வண்ணம் அழகு பெற அச்சியற்றி அரியவிஷயங்களை இனிய நடையில் உலகுக்களித்த பண்டிதர் பண்பு என்றும் பாராட்டற் பாலதாம். செல்வம் பெற்றதனாற் செய்யத்தக்க செய்கையும் அடையத் தக்க கீர்த்தியும் இஃதேயன்றோ? நந்தம் பண்டிதரவர்கள் கீர்த்தி முன்னரே எங்கும் பரவிநிற்பினும் இந்நாளில் இவ்விசை நூலால் வரும் இசையே இயைந்த ஏற்றமுடையதாகும். எந்நாளும் நின்று நிலவும் இந்நூலின் மாட்சியே போல் இவர்தம் கீர்த்தியும் நின்று நிலவுமன்றே. தேவாரம் முதலிய தமிழ் மறைகளிற் காணும் பண்களுக்கு ஒத்துவரும் இராகங்களை இந்நூலில் ஒர் அடைவிற்காட்டி இதைப்பற்றிய நூலொன்று விரைவில் வெளிவரும் என்று பண்டிதரவர்கள் காட்டிய குறிப்பைக்கண்டு பெருமகிழ்வடைகின்றேன். அவ்வகையில் தமிழ் மக்களின் மனத்தை விரைவில் மகிழ்விப்பாராக. இந்நூல் பெரிதும் தமிழிசையைப் போற்ற வந்ததாகும். ஆயினும் இதற்குக் ‘கருணாமிருதசாகரம்’ எனப்பெயர் புனைந்தனர். இது தமது ஞானாசிரியராம் கருணானந்தர் கருணையைத்துணையாக் கோடற்குக் குறிப்பான் ஒற்றுமை நயம்படவைத்த பெயராதல் விளங்கும். ஆயினும் தாமியற்றிய நூலின் உள்ளுறை தெள்ளிதின் விளங்க இசைத் தமிழ்நூல் என்னும் ‘கருணாமிர்த சாகரம்’ எனச்கூறின் சால அமைவுடைத்தாகும். (ஒப்பம்) கா. நமச்சிவாயன். The opinion of Mr. J. S. Chandler. | Chairman, Tamil Lexicon Committee. | ROYAPETTAH, |
I am very much interested in the work of Rao Sahib M. Abraham Pandither of Tanjore in developing the theory and practice of Karnatic Music. A glance at the table of contents makes one wish to read it. It is well worth while for scholars like him to do much work, and in the clash of expert opinions a solid basis will be found for treating these subjects. His claims for Tamil as a language are large, but they are worth careful study. (Sd. ) J. S. CHANDLER.
|