சுரம் மத்திய ஸ்தாயியின் சட்சமமாகும். ஒன்றான ஆதாரசட்சத்திலிருந்து இரண்டான மத்திய ஸ்தாயி சட்சத்திற்குப்போகும் முறையை முன்பக்கம் காட்டிய அட்டவணையில் காண்போம். ஒன்றின் துருவம் 0. அப்படியே இரண்டின் துருவம். 301030000. இதை சேம்பர்ஸ் என்பவரின் கணித அட்டவணையில் (Chambers Mathematical Tables) 2-ம் பக்கம் முதலாம் இரண்டாம் வரிகளில் காணலாம். இரண்டிற்குரிய மூல எண்ணாகிய .301030000 ஐ பன்னிரண்டால் வகுக்க .025085833 ஆகிறது. இதுவே இரண்டின் துருவலக்கத்திற்குக் கிடைக்கும் பன்னிரண்டு சுரங்களில் முதல் சுரத்தின் துருவமாம் அல்லது மூல எண்ணாம். இதை இரண்டால் பெருக்க இரண்டாவது சுரத்தின் துருவமும் மூன்றால் பெருக்க மூன்றாவது சுரத்தின் துருவமும் நாலால் பெருக்க நாலாவது சுரத்தின் துருவமும் இதுபோல் 12 சுரங்களின் துருவமும் மூலமும் கிடைக்கின்றன. இம்முறைப்படியே பன்னிரண்டு சுரங்களின் மற்றும் அளவுகள் யாவும் வரவேண்டும். பன்னிரண்டு சுரங்களுக்கும் கிடைக்கும் மூல எண் அல்லது துருவங்களை அட்டவணையின் நாலாவது கலத்தில் காண்போம். இரண்டின் துருவத்தை பன்னிரண்டால் பிரித்து ஒன்று முதல் பன்னிரண்டு லக்கங்களால் பெருக்கப்பட்டிருக்கிறதென்பதை மூன்றாவது கலத்தில் காண்போம். ஒன்று முதல் பன்னிரண்டு ஸ்தானங்களில் பன்னிரண்டு சுரங்களும் இன்னின்ன அலகு முறையோடு இன்னின்ன இராசியிய்ல நிற்கிறதென்பதை இரண்டாம் கலத்தில் காண்போம். நாலாவது கலத்தில் பன்னிரு சுரங்களுக்கும் வரும் மூல எண்களுக்குரிய எண்களை நாம் கவனிப்போமானால் .000000000 என்ற எண் ஒன்றாகும். பன்னிரண்டாவது மூல எண்ணாகிய .301030000 என்பதற்கு வரும் எண் இரண்டு. ஒன்றிலிருந்து இரண்டு வரைக்குமுள்ள ஒரு ஸ்தாயிக்குப் பன்னிரண்டு சுர ஸ்தானங்களுக்குரிய மூல எண்களை நாலாவது கலத்தில் பார்த்தோம். அதுபோலவே, ஒன்றிலிருந்து இரண்டு வரையுமுள்ள பன்னிரண்டு ஸ்தானங்களுக்கு வரும் எண்களை கவனிக்கவேண்டும். 1. முதல் லக்கத்திற்கு எதிரில் நாலாவது கலத்திலுள்ள .025085833 என்னும் மூல எண்ணிற்கு 1.059463 என்பது வரும் எண்ணாகும் என்பதை மேற்படி புத்தகம் 7-ம் பக்கம் 10-ம் வரியில் காண்போம். (Chambers' Mathematical Tables) 2. இரண்டாவது வரிக்கு எதிரில் நாலாம் கலத்தில் .050171667 என்னும் மூல எண்ணிற்கு 1.122462 என்பது வரும் எண் ஆகும் என்று மேற்படி புத்தகம் 8-ம்பக்கம் 23 வது வரியில் காண்போம். 3. மூன்றாவது லக்கத்திற்கு எதிரில் ஐந்தாவது கலத்தில் 1.189207 என்று வரும் எண்ணை புத்தகம் 9-வது பக்கம் 40-வரு வரியில் காண்போம். 4. நாலாவது வரிக்கு ஐந்தாவது கலத்திற் காணும் எண்ணை 11 வது பக்கம் 10 வரியில் காணலாம்.
|