32-அங்குல தந்தியில் மத்திய ஸ்தாயி சட்சம் வரை சுரங்கள் இன்னின்ன அளவில் வருகின்றனவென்பது. எட்டாவது கலத்தில் ஒரு தந்தியின் நீளம் ஒன்றானால் அதன் பாதியில் மத்திய ஸ்தாயி சட்சம் வருகிறதென்று இதன் முன் பார்த்தோம். யாழ் மனுட சரீரத்திற்கு ஒத்திருக்கிறதென்றும் புருவ மத்தி முதல் கரு ஸ்தானம் வரை 48 (471/2) அங்குலமுள்ள உடம்பின் மேல் பாகத்தை அளந்து அதில் 3 சாண் நீளம் சுரங்கள் நிற்கும் இடமாகவும் அதன் மேல் ஒரு சாண் காலியாயிருக்கிறதென்றும் இந்த முச்சாண் அவரவர் கையின் அளவின்படி யாழில் அமைக்கப்படவேண்டுமென்றும் முக்கியம் பற்றித் தூல உடம்பின் கணக்கையும் யாழின் அமைப்பையும் பற்றி நாலாவது பாகம் 785 வது பக்கமுதல் 792-ம் பக்கம் வரை சொல்லியிருக்கிறோம். அதின்படி யாழில் மேருமுதல் மெட்டுவரை 32 சாதி அங்குல நீளமுள்ள தந்தியின் பாதி 16 அங்குலம் வரையும் ஒருஸ்தாயியில் 12 சுரங்களும் படிப்படியாய் ஒன்றற்கொன்று தீவிரமாய் எப்படிப்போகின்றனவென்று பார்க்கவேண்டும். எட்டாவது கலத்தில் ஒன்றிலிருந்து பாதியாகச் செல்லும் பன்னிரண்டு சுரங்களின் அளவை முப்பத்திரண்டால் ஒவ்வொன்றாய்ப் பெருக்க 9-வது கலத்தில் 12 சுரங்களுக்கும் எதிரிலுள்ள இலக்கங்கள் அளவாகக் கிடைக்கின்றன. பன்னிரண்டாவது சுரமாகிய மத்தியஸ்தாயி சட்சம் 32 அங்குலநீளமுள்ள தந்தியில் 16-வது அங்குலத்தில் கிடைக்கிறதென்று காண்கிறோம். பத்தாவது கலத்தில் மேருவிலிருந்து எந்தெந்த இடைவெளிகளுடன் பன்னிரு சுரங்களும் வந்து 16-வது அங்குலத்தில் முடிகின்றன வென்பதைக் காட்டப்பட்டுள்ளது. இது ஒன்பதாவது கலத்தில் கிடைக்கும் அளவுகள் ஒவ்வொன்றையும் 32 அங்குல நீளமுள்ள தந்தியிலிருந்து கழித்துக்கொண்டுபோக வருவதினால் சுரஸ்தானங்களின் அளவுகள் காணப்படுகின்றன. பன்னிரண்டாம் வரிசையில் காணப்படும் மத்தியஸ்தாயிசட்சம்வரை 12 சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து 16-வது அங்குலத்தில் நிற்பதையும் அது 32 அங்குல நீளமுள்ள தந்தியின் பாதியில் நிற்பதையும் காட்டுகிறது. மேலும் ஒவ்வொரு சுரஸ்தானத்திற்கும் நடுவிலுள்ள தந்தியின் நீளம் இவ்வளவென்பதை 11வது கலத்தில் காண்போம். அவைகள் ஒவ்வொருஸ் தானத்திற்குமுள்ள வித்தியாசத்தைக் காட்டுகின்றன. இதனால் யாழில் காணப்படும் 12 மெட்டுகளும் படிப்படியாய்க் குறைந்த இடைவெவளிகளுடை யதாய் ஓசையில் உயர்ந்து இயற்கை வளர்ச்சியின்படி மனுடனின் முதுகெலும்பின் அளவாக உயர்ந்திருக்கிறதென்று காண்போம். பன்னிரு சுரங்களின் சென்ட்ஸ் கணக்கு. பன்னிரண்டாவது கலத்தில் சென்ட்ஸ்களின் அளவுகள் காணப்படுகின்றன. இவை Mr. Ellis என்பவர் சொல்லுகிறபடி ஒரு ஸ்தாயியை 1,200 சென்ட்ஸ்களாக வைத்துக்கொண்டால் 1, 2, 3, 4, ஆக 12 சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து நடுவில் வேறு இடைவெளிகள் உண்டாகாமல் ஒன்றற்கொன்று தீவிரமாய் ஒருஸ்தாயி முடிகிறதென்ற சாரங்கதேவரின் சுருதி
|