பக்கம் எண் :

845
பன்னிரு சுரங்களின் சென்ட்ஸ் கணக்கு.

இத்தகட்டிற்கும் மனிதனுடைய காதிற்குள்ளிருக்கும் ஆனகத்திற்கும் மிகுந்த பேதமிருக்கிறதென்று நாம் அறிவோம். இதுபோலவே சைரன் என்ற கருவியினால் சுரத்தை நிதானிக்கும் கணக்கும் காதினால் கேட்டறிந்து நிதானிக்கும் கணக்கும் சற்றேறக்குறைய ஒத்திருக்குமேயொழிய முற்றிலும் ஒத்திருக்கமாட்டாதென்று எண்ணுகிறேன்.

பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த ஆயப்பாலை முறையாலும் வட்டப்பாலை முறையாலும் இணை இணையாக ச-ப முறையிலும் கிளை, கிளையாக ச-ம முறையிலும் ஒரு இராசியில் பூர்ணமாய் ஏற்றக் குறைவின்றி முடிகின்றனவென்று மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அக் கருத்திற்கிணங்க ஒருஸ்தாயியில் பன்னிரு சுரங்களுக்கும் இக்கணக்கே பொருத்தமானது. பன்னிரு சுரங்களில் ஏழுசுரங்கள் இன்னின்ன இடைவெளிகளோடு ஆறு தாய் இராகங்களில் வருகின்றனவென்பதைப் பற்றி 822ம் பக்கத்தில் இதன்முன் பார்த்திருக்கிறோம். பன்னிரு சுரங்களில் ஆறு தாய்இராகங்களும் இன்னின்ன அலகுடன் வருகின்றவென்று 823-ம் பக்கத்தில் பார்த்திருக்கிறோம். ஒரு ஸ்தாயியில் ச-ப, ச-ம முறையாய்வரும் பன்னிரண்டு சுரங்கள் இன்னின்ன அலகோடு வருகின்றனவென்பதை 824,825-ம் பக்கங்களில் காட்டியிருக்கிறோம்.

இப்பன்னிரு சுரங்களும் ஆயப்பாலையில் வழங்கிவந்த சுரங்களே, இவைகள் செங்கோட்டியாழில் காணப்படும் பதினாற்கோவைக்குரிய சுரங்களே. இசைத்தமிழ் சிறந்துவிளங்கிய லெமூரியாநாட்டின் கரையோரங்களில் வசித்த வாலில்லாக் குரங்குகளும் பாடிக்கொண்டிருந்ததும் இச்சுரங்களே.

இப்பன்னிரண்டு சுரங்களையும் நிச்சயப்படுத்துவதில் பல சந்தேகங்களும் விசாரணைகளுமுண்டாகி சற்றேறக்குறைய, 120 வருடங்களுக்குமுன் ஒரு முடிவுக்கு வந்தது. பதினெட்டாவது நூற்றாண்டின் மத்தியில் Mozart (27-1-1759 - 1826) என்ற வித்துவானாலும் Haydn (31-3-1732 - 31-5-1809) என்பவராலும் இது முதல் முதல் உபயோகப்படுத்தப் பட்டது. இந்த முறைப்படி ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரண்டு சுரங்களையும் ஒரே அளவாய் ஒழுங்குப் படுத்தி பியானோ உண்டாக்கினபடியால் modulation அதாவது ஒரே கானத்தைப் பல keys களிலும் வாசிக்கும் படியான சிலாக்கியம் உண்டாயிற்று. இது அதே நூற்றாண்டின் கடைசியில் கியாதிபெற்றிருந்த Beethoven (17-12-1770 - 1827) என்னும் வித்துவானால் 120 வருடங்களுக்கு முன் பூரண நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. Equal Temperament உண்டாகி இப்போது சற்றேறக்குறைய 120 வருடம் ஆயிற்று. Equal Temperament அதாவது சம அளவுள்ள ஓசை யாகவிருக்கவேண்டுமென்று நிச்சயப்படுத்திய சுரங்கள் இப்பன்னிரண்டுமே.

Capt. Day என்பவர் 'நாம் Equal Temperament அதாவது ஓசையின் சம அளவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னாலேயே இந்துதேச வித்துவான்கள் கண்டுபிடித்து யாழில் அமைத்திருக்கிறார்கள்' என்று சொல்லுவது இன்றைக்கு 2000 வருடங்களுக்குமுன் மாதவி பிரியமுடன் வாசித்த சகோடயாழில் இரண்டு ஸ்தாயிகள் அமைத்து அதில் பதினாலு கோவையாய் நின்ற இப்பன்னிரு சுரங்களையே.

இற்றைக்குச் சுமார் 3,000 வருடங்களுக்கு முன் கடைச் சங்க காலத்திருந்த ஆசிரியர் நல்லந்துவனார் பரிபாடலில் காணப்படும்.