பக்கம் எண் :

873
சுரம் சுருதிகளின் பெயர்கள்.

மேற்காட்டிய பிரம மேளத்தைக் கவனிக்கும் பொழுது பூர்வ தமிழ்ப் பெயர்கள் அன்னிய பாஷைகளில் மாற்றப்பட்டு வழங்கி வருகிறதாகத் தெரிகிறது. ஆனால் பூர்வத்தின் அலகு கணக்குகளைக் கொண்டே சுரங்களின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இப் பிரம வீணையில் சொல்லப்படும் சுரங்களுக்கேற்பக் கானம் செய்வதே வட்டப்பாலை முறையாம். இவ்வட்டப்பாலை முறை முதல் நூற்றாண்டிலிருந்த இளங்கோவடிகள் காலத்திற்குச் சுமார் 1000, 1500 வருடங்களுக்கு முன்னுள்ளதாக நினைக்க ஏதுவிருக்கிறது.

நப்பண்ணனார் பாடியதும் மருதனல்லச்சுதனார் பண் காந்தாரத்தில் இசை அமைத்ததுமான " நிலவரையழுவத்தான வானுறைபுகறந்து" என்னும் முதனினைப்பினையுடைய கடவுள் வாழ்த்துப் பரிபாடலில் 41 முதல 46 வரையுள்ள அடிகளும் அவற்றிற்குப் பரிமேலழகர் உரையும் வருமாறு.

"தெய்வப் பிரமஞ் செய்குவோருங்
 கைவைத் திமிர்குழல் காண்குவோரு
 மிரதிகாம னிளிகுரல் சமங்கொள்வோரும்
 வேள்வியி னழகியல் விளம்பு வோருங்
 கூர்நாண் குரல் கொம்மென வொலிப்ப
 வூழுறு முரசி னொலிசெய் வோரும்"

(இ-ள்) தெய்வத்தன்மையையுடைய பிரமவீணையை யெழுப்புவோரும், கைவைத்தூதிக் குழலினிசையை யளப்போரும், யாழின்க ணிளிவாய்ப் பாலையையும் குரல்வாய்ப் பாலையையும் வலியவு மெலியவுந் தாக்காது சமனாத்தாக்கி யதனின்பத்தைக் கொள்வோரும். வேள்வி - பூசை.

யாழினது நாண்குரல் கொம்மென வொலித்த வளவிலே யத்தாளத்திற்கேற்ப முரசினொலியை யெழுப்புவாரும்.

தெய்வத் தன்மை பொருந்திய பிரம வீணை என்று இங்கு சொல்வதையும், மேளாதிகாரலக்ஷணம் என்னும் புத்தகத்தில் பிரம வீணை உருத்திர வீணை என்று சொல்லப்படுவதையும் கவனிக்கையில், நாம் தற்காலத்தில் 12 அரைச் சுரங்களோடு வழங்கும் வீணையே உருத்திர வீணை யென்றும், அதில் வட்டப்பாலை முறையாய் 24 அலகுகளில் இரண்டு அலகு குறைத்துக் கானம் செய்வது பிரம வீணை யென்றும் சொல்லுவதாகத் தெரிகிறது. யாழின்கண் இளிவாய்ப் பாலை நெய்தல் யாழ் என்றும், குரல் வாய்ப்பாலை மருதயாழ் என்றும் இதன்முன் சொன்னபடியே, குரல் குரலாக ஆரம்பித்துப் பாடும் செம்பாலையையும் இளிகுரலாக ஆரம்பித்துப் பாடும் கோடிப் பாலையையும் ஒருவர்பின் ஒருவராகப் பாடி அதன் இன்பத்தை அனுபவித்தார்கள் என்று சொல்லப் படுகிறது. நரம்புகள் கொம்மென ஒலிக்கவும் அவற்றின் தாளத்திற்கேற்ப முரசு ஒலிக்கவும் பாடிக்கொண்டிருந் தார்களென்று அறிகிறோம். குரலே குரலாக ஆரம்பித்துப் பாடுவோரும் அக்குரலே இளியாக வைத்துப் பாடுவோரும் சமனாகத்தாக்கி அதன் இன்பத்தை அனுபவித்தார்கள் என்பதைக் கவனிப்போமானால் இதன் முன் 691, 692, 693-ம் பக்கங்களில் கண்ட ஆய்ச்சியர் குரவையின்படி இதுவும் சமத்துவத்தில் பாடும் ஒரு முறையாகக் காணப்படுகிறது. ச, ரி, க, ம, ப என்ற சுரங்களில் பல விந்நியாசங்கள் செய்து ஒருவர் பாடும் பொழுது ப, த, நி, ச, ரி என்று பல விந்நியாசங்கள் செய்து அதே சுரத்தில் பாடுகிற தென்று தோன்றுகிறது. சட்சமத்திற்குப் பதில் பஞ்சமத்தை ஆரம்ப சுரமாகப் பாடுகிறதென்று பொருளாம். இதனால் பூர்வத்தில் யாழிலும்