குழலிலும் தண்ணுமையிலும் (தாளத்திலும்) மிகப் பாண்டித்திய முடைய வர்களாயிருந்தார்களென்றும் பிரமவீணை அல்லது வட்டப்பாலை முறைப்படிக் கானஞ்செய்து வந்தார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் வேங்கடமகி என்பவர் எழுதிய சதுர் தண்டிப் பிரகாசிகையில் 72 மேளக்கர்த்தாக்களைத், தாம் செய்ததாகச் சொல்லியிருக்கிறார் என்று 232-ம் பக்கத்தில் சொல்லியிருக்கிறோம். அதில் வழங்குகிற சுத்த ரிஷபம் சதுர்சுருதி ரிஷபம் என்பவை முறையே 2, 4, 6 அலகுள்ள ரி, க, ம, த, நி என்ற சுரங்களுக்கு நாம் தற்காலத்தில் வழங்கும் பெயர்களாக அவர் நூலில் காண்கிறோம். இவருக்கு முன் எழுதப்பட்டதாகத் தோன்றும் வியாசகடகம் என்னும் ஒரு புத்தகம் இராமநாதபுரம் சமஸ்தான சங்கீத வித்துவான் மகா-?-?-ஸ்ரீ சீனிவாச ஐயங்கார் அவர்களிடம் இருக்கிறதை நேரில் பார்த்திருக்கிறேன். அதிலும் 2, 4, 6 அலகுள்ள ரி, க, ம, த, நி என்ற சுரங்களுக்கு நாம் தற்காலத்தில் வழங்கிவரும் பெயரின்படி கிரகநியாச அம்சத்துடன் இராக இலக்ஷணம் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தனையாவது இராகமென்று கண்டு கொள்ளக்கூடிய விதமாய்க் கடப்பையாதி சங்கையுடன் வழங்கும் கனகாங்கி, ரத்னாங்கி, கான மூர்த்தி என்னும் பெயர்களின்படியே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வேங்கடமகி என்பவர் 72 பெயர்களையும் முற்றிலும் மாற்றி வேறு பேர் கொடுத்து தன்னால் 72 மேளங்களும் செய்யப்பட்டன வென்றுசொல்லுகிறார். அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையைக் கவனிக்கும்போது ஒவ்வொரு மேளக் கர்த்தாவின் பெயரும் மாற்றப்பட்டிருப்பதையும் ஜன்னிய இராகங்களில் பலவற்றைத், தாய் இராகமாகச் சொல்வதையும் நாம் காணலாம். இதில் பதினைந்தாவது கர்த்தா இராகமாகிய மாயாமாளவமும் இருபத்தொன்பதாவது கர்த்தா இராகமாகிய தீர சங்கராபரணமும் 36-வது கர்த்தா இராகமாகிய ஜலநாட்டையும் பெயர் மாற்றப் படாமலிருப்பதைக் கொண்டு இவருக்கு முன்னேயே 72 மேளக் கர்த்தாக்களடங்கிய ஒரு நூலிருந்த தென்று தெளிவாகக் காண்கிறோம். இம்மூன்று இராகங்களும் உலகப்பிரசித்தமாய் வழங்கிவந்ததோடு இவற்றின்கிளை அல்லது ஜன்னிய இராகங்களும் தமிழ் நாட்டில் மிக விசேஷமாய்ப் பாடப்பட்டு வந்ததி னிமித்தம் இவைகளைப் பெயர் மாற்றாமல் விட்டு விட்டாரென்று நினைக்க ஏது விருக்கிறது. கனகாங்கி ரத்னாங்கி என்ற பெயர்களை யுடைய 72 மேளக்கர்த்தா முறையானது உள்ளபடியே வியாசரால் எழுதப்பட்டதென்று நாம் நினைப்போம். அப்படி நினைப்பது சரியாக மாட்டாது. ஏனென்றால் வியாசகடகம் வியாசரால் எழுதப்பட்டிருக்குமானால் ஐந்தாம் நூற்றாண்டில் வந்த பரதரும் 13-ம் நூற்றாண்டிலிருந்த சங்கீதரத்னாகரரும் இதைச் சொல்லாமல் விடமாட்டார்கள். மேலும் அவர்கள் எழுதிய இராகங்களையும் அவற்றின் முறையையும் கவவனிப்போமானால் கடப்பையாதி சங்கையின்படி பேர் குறிக்கிற வழக்கம் இருந்ததில்லை என்று தெரிகிறது. ஆகையினால் 72 மேளக்கர்த்தா முறையின் பெயர்கள் சாரங்க தேவருக்குப் பிந்திய காலத்திலும் வேங்கடமகிக்கு முந்திய காலத்திலும் வந்த ஒரு வியாசரால் எழுதப்பட்டிருக்க
|