பக்கம் எண் :

10வளவன் பரிசு

அன்னம் : உருத்திரங்கண்ணன் வழியில் வந்த உங்கள் பெயரும்

  உருத்திரங்கண்ணன்தானோ?

தா. கண்ணன் : இல்லை. என் பெயர் தாமரைக்கண்ணன்.

அன்னம் : தாமரைக்கண்ணன்! பெயருக்கும் முகத்துக்கும் சம்பந்தம்
  இல்லையே! உருத்திரங்கண்ணன் என்னும் பெயரே பொருத்தமாகத்
  தெரிகிறது.

தா. கண்ணன் : பெண்ணே...

அன்னம் : என் பெயர்...

தா. கண்ணன் : அன்னமே, தமிழ்ப்பாவில் பிழை நஞ்சு கலப்பவரைக்
  கண்டால் என் முகம் தணலாகச் சீறும்; தமிழ்ப்பாடலை இசையும்
  பொருளும் இயைய உரைப்பவரைக் கண்டால் என் முகம் தாமரையாக
  மாறும். உன்னால் பிழையற்ற முறையில் பட்டினப்பாலையைப் பாட
  முடிந்தால் பாடு. இல்லையேல், திருவாயை மூடு. நல்லது செய்தல் ஆற்றீர்
  ஆயினும், அல்லது செய்தல்  ஓம்புமின்

  [தாமரைக்கண்ணன் வேகமாகக் கடையிலிருந்து இறங்கி வெளியேறுகிறான்.]

அன்னம் : (மெல்லிய குரலில்) தாமரைக்கண்ணன்.......பட்டினப்பாலை....

அம்பலம் : யாருடனம்மா பேசுகிறீர்கள்? அந்தத் தாமரைக்கண்ணன் போய்
  ஆறு நொடி ஆயிற்று!

அன்னம்: (திடுக்கிட்டவளாய்) அம்பலம், தந்தை கடைக்கு வருவதற்குள்,
  தாறுமாறாகக் கிடக்கும் நவமணிகளை ஒழுங்குபடுத்தி வை.