பக்கம் எண் :

100வளவன் பரிசு

  திலிருந்து ஒரு சிறு கல்லும் பெயராமல் காப்பேன்! நேரத்தை வீணாக்கமல்
  புறப்படுங்கள்!

இராசேந்திரன் : தாமரைக்கண்ணா! இந்தப் பெண்ணின் பேச்சு என்னைச்
  சிலிர்க்கச் செய்கிறது! இவள் சொன்னபடி செய்வாள் என்ற நம்பிக்கை
  எழுகிறது. புறப்படு, பாண்டியனின் பாசறை நோக்கிச் செல்வோம்.

தா. கண்ணன் : சென்று வருகிறேன்! அன்னம்.

   [தாமரைக்கண்ணனும் இராசேந்திரனும் மண்டபத்திலிருந்து இறங்கி
   வேகமாக வெளியேறுகின்றனர்.]

அம்பலம் : என்னம்மா இது, ஏதோ ஒரு வேகத்திலே இந்தக் கண்ணன்
  மண்டபத்தைக் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்துட்டீங்க! எப்படியம்மா
  காப்பீங்க?

அன்னம் : அம்பலம், பாண்டிய வீரர்களை இந்தப் பாவை தடுத்து
  நிறுத்தப்போவது உறுதி! அந்த அதிசயத்தை நாளை நீயே நேரில்
  தெரிந்துகொள். நான் என் தாயாருடன் அடைக்கலம் புகுந்த கோயிலுக்கு
  இப்போதே போகவேண்டும். உடன் வருகிறாயா?

அம்பலம் : வரேனுங்க! இன்னும் என்ன செய்ய வேண்டுமானாலும்
  சொல்லுங்க. செய்யறேன்
 
அன்னம் : நன்றி அம்பலம். இப்போது வழி காட்டிச் செல்.
 
அம்பலம் : நல்லதுங்க. என் பின்னாலேயே வாங்க.

  [அம்பலம் தீப்பந்தத்தை முன்னே நீட்டி வழிகாட்டி நடக்க, அன்னம்
  அவன் பின்னே செல்கிறாள்.]

                         -திரை-