பக்கம் எண் :

காட்சி - 14101

காட்சி - 15


இடம் : உறையூர்க் கோயில்

நேரம் : இரவு

தோன்றுவோர் : அம்பலம், அர்ச்சகர், அன்னம்,

   [உறையூரின் நடுவே உயர்ந்து நிற்கும் கோயிலின் நெடுங்கதவுகள்
   மூடியிருக்கின்றன. அம்பலத்துடன் அங்கே நின்று கதவைத் தட்டுகிறாள்
   அன்னம்.]

அன்னம் : ஐயா, குருக்களய்யா கதவைத் திறங்கள்; சீக்கிரம் திறங்கள்!

   [அன்னம் கதவைப் பலமாகத் தட்டுகிறாள். அம்பலமும் தட்டுகிறான்.
   சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து குருக்களின் குரல் ஒலிக்கிறது.]

குருக்கள் : யாரது?

அன்னம் : நான்தான், அன்னம். நவமணி வணிகர் தனபதியின் மகள்.
   கொஞ்சம் கதவைத் திறங்கள்.

   [குருக்கள் தாளை நீக்கும் ஓசை கேட்கிறது. திட்டி வாசல் மட்டும்
   திறக்கிறது. குருக்கள் வெளியே எட்டிப் பார்க்கிறார்]

குருக்கள் : அன்னம், இந்த நள்ளிரவு வரை எங்கம்மா போனாய்? இருள்
  பரவியபோது நீ வெளியே புறப்பட்டாயே?

அன்னம் : குருக்களய்யா, நீங்கள் சொன்னது உண்மை. பாண்டிய விரர்கள்,
  பழம் பெரும் அரண்மனையின் அழகிய மாளிகைகளை யெல்லாம்
  மண்மேடாக்கி