விட்டார்கள். பட்டினப்பாலைப் பரிசில் மண்டபம் மட்டும் இன்னும்
நிற்கிறது. அதை எப்படியும்
காப்பாற்றுவதாகச் சபதம் செய்திருக்கிறேன்.
கோயிலுக்குள்ளே அடைக்கலம் புகுந்த மகளிர்கள்
என்ன செய்கிறார்கள்?
குருக்கள் :
நள்ளிரவில் என்னம்மா செய்வார்கள்? துக்கத்தை ஓரளவு
மறந்து தூக்கத்தில்
ஆழ்ந்திருக்கிறார்கள்.
அன்னம் :
ஐயா, கோயிலிருக்கும் சகோதரிகளின் உதவி கிடைத்தால்
பரிசில் மண்டபத்தைக்
காப்பாற்றி விடுவேன். அவர்களை எழுப்பிக்
கருவறையின் முன் மண்டபத்துக்கு வரவழையுங்கள்!
அவர்களிடம் நான்
பேசப்போகிறேன்!
குருக்கள் :
பரிசில் மண்டபம் உறையூரின் தனிச்சிறப்பு! அதைக் காப்பது
நம் தலையாய
கடமை! திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான் உன்
முயற்சிக்குத் துணை செய்யட்டும்;
வாம்மா, உள்ளே!
அன்னம் :
அம்பலம், நான் கோயிலுக்குள் போகிறேன். இன்னும் இரண்டு
நாழிகைக்குள் இங்கிருந்து
புறப்பட்டுப் பரிசில் மண்டபத்துக்குப்
போவேன். அதற்குள் எனக்கு நூலேணி வேண்டுமே, கிடைக்குமா?
அம்பலம் :
ஆவண வீதியை அழித்து விட்டாங்களே! அதன் இடிபாடுகளில்
தேடிப் பார்த்தால்
நூலேணி கிடைச்சாலும், கிடைக்கலாம். தேடிப்
பார்க்கிறேனம்மா!
குருக்கள் :
அன்னம், கோயிலிலே நூலேணி இருக்கிறது. விமானக்
கலசத்தைச் சுத்தப்படுத்த மேலேறிச்
செல்பவர்களுக்காக உறுதிமிகுந்த,
உயர்ந்த ரக நூலேணி |