இங்கே இருக்கிறது. உன் முயற்சிக்கு அது பயன்படுமானால் தருகிறேன்.
அன்னம் :
நன்றி குருக்களாய்யா! அம்பலம், குருக்களிடமிருந்து
நூலேணியைப் பெற்றுக்கொண்டு,
இங்கேயே இரு.
அம்பலம் :
சரியம்மா.
அன்னம் :
குருக்களய்யா, உறங்கும் பெண்மணிகளை நானே எழுப்பிக்
கொள்கிறேன். நீங்கள்
நூலேணியை எடுத்து அம்பலத்திடம் கொடுங்கள்.
குருக்கள்:
ஆகட்டும், அன்னம். உள்ளே, வா! அம்பலம் நீயும் உள்ளே
வா!
[அம்பலமும் அன்னமும் திட்டி வாசல் வழியே உள்ளே நுழைய, குருக்கள்
அச் சிறிய கதவை மூடித்
தாளிடுகிறார்.]
-திரை-
காட்சி -16
இடம் :
உறையூர்க் கோயிலில் கருவறையின் முன் மண்டபம்.
நேரம் :
நள்ளிரவு.
தோன்றுவோர் :
அன்னம், உறையூர் மகளிரான பொன்னி, பூங்கொடி,
காந்திமதி, கமலை, காவேரி
முதலியோர்.
[கருவறையின் முன் மண்டபத்தே உறக்கத்திலிருந்து விழித்த மகளிர்
திரண்டு நிற்கிறார்கள்.
தூக்கக் கலக்கம் அகலாமல் கண்ணைக்
கசக்கியவாறு நிற்பவர் சிலர். ‘என்ன |