நடக்கிறது? ஏன் நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்பினார்கள்? அங்கே
நின்று அமைதியாக
இருக்கும்படி ஒருத்தி சொல்கிறாளே, யார் அவள்?
என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இடையிடையே ‘அமைதி,
அமைதி’ என்ற அன்னத்தின் குரல் அழுத்தமாய் ஒலிக்கிறது.
அன்னம் :
அமைதி, அமைதி! என்னருமைச் சகோதரிகளே!
அமைதியாயிருந்து நான் சொல்வதைச்
செவிகொடுத்துக் கேளுங்கள்.
[சலசலப்பு சிறிது சிறிதாக அடங்கி, அமைதி பிறக்கிறது, அன்னம் பேசத்
தொடங்குகிறாள்]
அன்னம் :
ஊரெனப் படுவது உறையூரே’ என்று உயர்ந்தோரால்
புகழப்பட்ட உறையூர்வாழ் சகோதரிகளே,
உங்கள் உறக்கத்தைக்
கலைத்தமைக்கு முதலில் என்னை மன்னியுங்கள்!
பொன்னி :
நீ யார்?
அன்னம் :
உறையூர் நவமணி வணிகர் தனபதியின் மகள். அதுகூட
முக்கியமல்ல. ஓங்கிய
புகழ்கொண்ட உறையூரில் பிறந்தவள்! உங்களுள்
ஒருத்தி! சகோதரிகளே, சோழவள நாட்டில்
பெருநகரங்கள் பல உண்டு.
என்றாலும் தனித்த சிறப்புப் பெற்ற பழம் பெரு நகரம் நமது
உறையூர்தான்! இந்த உறையூரைத் தான் காவிரிக்குக் கரையமைத்த
காவலன் கரிகாலன் தலை
நகராகக் கொண்டு தரணியையே வென்றான்!
அறியாச் சிறு பருவத்தில் நரை முடித்து நல்லுரை
வழங்கிப் புகழ்
கொண்டான்! அந்தத் திருமாவளவனைப் பாடி மகிழாத புலவர்கள்
இல்லை.
புலவர் |