களுக்குத் திலகம் போன்ற உருத்திரங்கண்ணனார். கரிகாலனை ஒரு
பெரும் பாட்டால் சிறப்பித்தார்!
பூங்கொடி :
தெரியுமே, எங்களுக்கு! கண்ணனார் பாடிய நூல்
பட்டினப்பாலை என்பதும் தெரியும்!
அதற்கு வளவன் பதினாறு நூறுாயிரம்
பொன் பரிசு வழங்கியதும் தெரியும்.
கமலை :
அவ்வளவுதானா! பட்டினப்பாலை அரங்கேறிய பதினாறுகால்
மண்டபத்தையும் கண்ணனார்க்கே
வழங்கிவிட்டான் கரிகாலன் என்பதும்
தெரியுமே!
காந்திமதி :
அந்தப் பரிசில் மண்டபம் அரண்மனைக் கட்டடங்களில் மிக
அழகானது! உறையூர்க்
கட்டடங்களில் மிகவும் உயரமானது. இந்த ஊரின்
எந்தப் பகுதியில் நின்று பார்த்தாலும்
அந்த மண்டபத்தைப் பார்க்கலாம்.
அன்னம் :
முடியாது, சகோதரி! பார்க்க முடியாது! நாளை உறையூரின்
எல்லையில் அல்ல, அரண்மனைக்குள்ளே
நின்று நோக்கினாலும் பரிசில்
மண்டபத்தைப் பார்க்க முடியாது.
காந்திமதி :
உன்னால் பார்க்க முடியாதா? ஒருவேளை உனக்குக் கண்
குருடா?
[எல்லோரும் இதைக்கேட்டுச் சிரிக்கிறார்கள்]
அன்னம் :
நான் குருடியல்ல. என் கண் ஒளி பெற்றது தான்! ஆனால்
நாளை கண்ணன் மண்டபம்
இடிந்து விழும் கோரக்காட்சியைக்
காண்பதற்குப் பதில் என் கண் குருடாகி விடுவதையே
விரும்புகிறேன்.
கண்ணுக்கு விருந்தாகும் கண்ணன் மண்டபம் தகர்ந்து |