படைவீரன்-1 :
அண்ணே, உறையூர் அரண்மனையை அழிக்கும் வேலை
இன்றோடு முடிந்துவிடுமா?
படைவீரன்-2 :
செய்ய முடியாது. மேற்குப் பகுதியில் ஒரு மாளிகையை
இடிக்க வேண்டும். இதோ
நடுவே நிற்கும் மண்டபம் நம்மீது விழாமல்
எச்சிரிக்கையோடு இடிக்க வேண்டும். எவ்வளவு
உயரம்!
[படைவீரன் - 2 இப்படிச் சொல்லிக் கொண்டே தலையை உயர்த்தி
மண்டபத்தைப்
பார்க்கிறான். மண்டபத்தின் மேற்புறத்தில் அன்னமும்
உறையூர் அரிவையரும் கூட்டமாக நிற்பதைக்
கண்டு அதிசயிக்கிறான்.]
படைவீரன்-2 :
அடடே! மண்டபத்தின் மேலே எவ்வளவு கூட்டம்,
அவ்வளவு பேரும் பெண்கள்!
படைவீரன்-1 :
ஆமாம், அழகான பெண்கள்!
படைவீரன்-2 :
மூடா, அழகை ரசிக்க இதுவா நேரம்? மொத்தம் ஐம்பது
அறுபது பெண்கள்
இருப்பாங்க போல் தோணுதே!
படைவீரன்-1 :
ஐம்பது அறுபதா? சுமார் நூறு பேர் இருப்பாங்கண்ணே!
படைவீரன்-2 :
இவ்வளவு பெண்கள் எப்படி மண்டபத்தின்
மேலேறினாங்க? எதுக்காக ஏறினாங்க?
தம்பி, இது எனக்கு நல்லதா
தோணலே. ஓடு, ஓடு! ஓடிப்போய் நம் படைத்தலைவரைக் கையோடு
அழைச்சுகிட்டு ஓடிவா!
[படைவீரன் - 1 ஓடுகிறான். அரண்மனைப் பகுதியில் நுழைந்த மற்ற
வீரர்களும் மண்டபத்தின்
மீது மங்கையர் கூட்டத்தைக் கண்டு அங்கே
வருகின்றனர்.] |