[அன்னம் முன் வந்து பேசுகிறாள்.]
அன்னம் :
படிகள் இல்லாவிட்டால் மண்டபத்தின் மேலே ஏறமுடியாதா?
இதோ இந்த நூலேணி துணையால்
மேலேறி வந்தோம்!
[அன்னம் நூலேணியை எடுத்துக் காட்டிவிட்டுப்பின் அதைத் தளத்தில்
வைத்துவிடுகிறாள்.]
படைத்தலைவன் :
ஏன் மண்டபத்தில் நிற்கிறீர்கள்?
அன்னம்
: ஐயா படைத்தலைவரே, நாங்கள் இந்த உறையூர்ப் பெண்கள்!
உங்கள் அரசர் இந்தக்
கன்னித் தமிழ் மண்டபத்தை இடிக்க
ஆணையிட்டுள்ளார். அதைத் தடுக்கவே இங்கே நிற்கிறோம்!
படைத்தலைவன் :
என்னது? இடிப்பதைத் தடுக்கப் போகிறீர்களா? எப்படி?
மேலே கல், கத்தி,
கம்பு-இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? இடிக்கவரும்
எங்கள் மீது அவற்றை எறியப் போகிறீர்களா?
[படைத்தலவர் கேட்டதும் சூழநின்ற பாண்டிய வீரர்களில் ஒருவன் கல்லும்
கம்பும் போடப்
போறாங்க. விலகி நில்லுங்கடா என்று கூற வீரர்கள் சற்று
விலகி நிற்கிறார்கள்.]
அன்னம்
: வீராதி வீரர்களே, விலகிப்போக வேண்டாம்! நாங்கள் கல்லும்
கத்தியும் எறிவோம்
என்று பயப்படாதீர்கள்.
படைத்தலைவன் :
பாண்டிய வீரர் கல்லுக்கும் கத்திக்கும்
பயப்படமாட்டார்கள்! நீங்கள்
பத்துக் கல்லை எறி |