பக்கம் எண் :

112வளவன் பரிசு

  வதற்குள் பாதி மண்டபத்தை இடித்து விடுவார்கள். இடிந்து விழும்
  மண்டபத்தோடு நீங்களும் விழுந்து மடிந்து விடுவீர்கள்!

அன்னம்? படைத்தலைவரே, பயப்படா வீரரே, எங்களிடம் கல் இல்லை.
  கத்தியில்லை. ஆனாலும் இந்த மண்டபத்தை நீங்கள் இடிக்காமல் தடுக்கப்
  போராடுவோம். எமது போர் ஆயுதப் போரல்ல; அறப்போர்!

படைவீரன்-1 : அறப்போரா? மறப்போர் தெரியும். மற்போர் புரியும்.
  அறப்போர் தெரியலையே....

அன்னம் : வீராதிவீரர்களே, எங்களிடம் கல்லும் கத்தியுமில்லை. ஆனால்

   எங்களிடம் உன்னதமான உயிர் இருக்கிறது! அதை எறிவோம்! அதுதான்

  அறப்போர்!

படைத்தலைவன் : பெண்ணே, நீ தொடக்கத்திலிருந்தே குழப்பந் தரும்படி

   பேசுகிறாய். உயிரை எறிவதா? எப்படி?

அன்னம் : இந்தக் கண்ணன் மண்டபத்தை இடிக்க முயன்றால், கடப்பாரை
  மண்டபத்தில் பட்டால், உடனே இங்கே நிற்கும் நாங்கள்
  ஒவ்வொருத்தராகக் கீழே குதிப்போம்!

படைத்தலைவன் : கீழே குதித்தால் உடல் கூழாகும்! உயிர் ஓடிப்போகும்!
 
அன்னம் : ஆம் உயிர் போகும்! அதைத்தான் நான் உயிரை எறிவோம்
  என்று சொன்னேன். மண்டபத்தை இடிப்பதற்குள் நாங்கள் மளமளவென்று
  கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்வோம்! படைத் தலைவரே,
  பெண்பாவம் பொல்லாதது! பெண் கொலை புரிந்த நன்னனுக்கு வந்த
  இழிவும் அழிவும் தெரியாதா உங்களுக்கு? நூற்றுக்குக் மேற்பட்ட