பக்கம் எண் :

காட்சி - 17113

  மாசற்ற மங்கையர்களை, கற்புக்கடம்பூண்ட காரிகையரை, தெய்வமாகச்
  சீலர்கள் போற்றும் மாதர்களைக் கொன்ற பழியைச் சுந்தர பாண்டியர்க்குப்
  பெற்றுத் தாருங்கள்! தமிழக வரலாற்றில் தாய்க்குலத்தை மாய்த்த
  மன்னர்கள் இல்லை! சுந்தர பாண்டியருக்கு அந்தப் பழி படிந்த
  பட்டத்தைப் பெற்றுத் தாருங்கள்!

படைவீரன்-2 : தலைவரே, இந்த மண்டபத்திலிருந்து இவங்க கீழே
  குதிப்பாங்களா? சும்மா கதை விடறாங்க. இந்த உயரமான
  மண்டபத்திலிருந்து கீழே குதிப்பதை நினைச்சாலே என் மனசு நடுங்குதே!
  இவங்க எப்படிக் கீழே குதிப்பாங்க?

அன்னம் : நடுங்கும் வீரேன! உனக்குப் பயமாக இருக்கலாம்! எனக்குப்
  பயமில்லை! என்னுடன் நிற்கும் என் தோழியர்க்குப் பயமில்லை. கண்ணன்
  மண்டபத்தைக் காக்க உயிரை அர்ப்பணிக்கும் முடிவோடுதான் இங்கே
  வந்திருக்கிறோம். சகோதரிகளே நான் சொல்வது சரிதானே!

பலர் : சரி! சரி!

அன்னம் : கேட்டீர்களா வீரர்களே! வேண்டுமானால் இவர்கள் சொல்வதைச்
  சோதித்தும் பார்த்துக் கொள்ளுங்கள். கடப்பாரையினால் இந்த
  மண்டபத்தின் தரையிலேயே சும்மா தட்டிப்பாருங்கள். தட்டுக்கு ஒருவர்
  வீதம் நாங்கள் கீழே குதிப்பதைக் காணலம்.

படைத்தலைவர் : அதையும் பார்த்துவிடுகிறேன். (ஒரு வீரனைப்பார்த்து)
  ஏய், கடப்பாரையால் கட்டடத்தைக் தாக்கு!