படைவீரன்-4 :
சரிங்க!
அன்னம் :
அருமைத் தோழியரே, கண்ணன் மண்டபத்தைக் காக்க முதலில்
யார் உயிர் துறக்க
முன் வருகிறீர்கள்?
கமலை :
நான் வருகிறேன்?
காந்திமதி :
முதல் வாய்ப்பு எனக்குக் கொடு!
காவேரி :
எனக்கு முதல் வாய்ப்பைக் கொடம்மா!
அன்னம் :
காவேரி, ‘இப்போதோ. இன்னும் சற்று நேரத்திலோ பிரசவிக்கும்
நிலையிலுள்ள
நீ நான் தடுத்தும் இந்தப் புனிதப் பணியில் பங்குகொள்ள
முன் வந்தாய்! முன்னே சரியும்
வயிற்றோடு நூலேணி ஏறி மண்டபத்தின்
மேலே வர அதிக சிரமப்பட்டாய்! அதனால் முதல்
வாய்ப்பை உனக்கே
தருகிறேன்.
காவேரி :
(உவகை பொங்க) மிக்க மகிழ்ச்சி! மிக மிக மகிழ்ச்சி!
கமலை :
எனக்கு இரண்டாவது வாய்ப்பு!
அன்னம் :
சரி! முதலில் காவேரி, அடுத்து கமலை! இரண்டு முறைக்கு
மேலேயும் தட்டினால், தாக்கினால்,
இங்கே நிற்கும் வரிசையில் தட்டுக்கு
ஒருவராய்க் கீழே குதியுங்கள்! (கீழே நோக்கி)
படைத் தலைவரே! இதோ
நிறை மாதக் கருக்கொண்ட காவேரி முதல் பலியாகத் தயாராகி விட்டாள்!
உம்.... தாக்குங்கள் மண்டபத்தை!
படைவீரன்-2 :
தலைவரே, அந்தக் கர்ப்பிணிப்பெண் உண்மையிலேயே
குதிச்சிடுவா
போலிருக்கே! பெண் பாவம் பொல்லாதது! கர்ப்பிணியைக்
கொன்ற பாவம் ஏழு ஏழு பிறவிக்கும்
தொடரும்னு சொல்வாங்க! |