படைத்தலைவன் :
நிறுத்து! கடப்பாரையால் கட்டடத்தைத் தாக்காதே!
வீரர்களே, மடமடவென்று
இந்த மண்டபத்தில் ஏறுங்கள். ஆளுக்கு
ஒருவராய் இந்தப் பெண்களைத் தோளிலே தூக்கிக்
கொண்டு
இறங்குங்கள்!
[வீரர்கள் சிலர் மண்டபத்தை நெருங்க முயல்கிறார்கள்.]
அன்னம் :
(உரத்த குரலில்) நில்லுங்கள்!
[வீரர்கள் மேலே செல்லாமல் நிற்கிறார்கள்]
அன்னம் :
மண்டபத்தின் மீது ஏறுவதற்கு யாராவது முயன்றாலும்,
இங்குள்ள பெண்கள் ஒவ்வொருவராய்க்
கீழே குதித்து உயிர் விடுவார்கள்!
காவேரி, தயாராய் இரு! இந்த மண்டபத்தில் யாராவது
ஏற முயன்றால்,
இந்த மண்டபத்தில் யாராவது கால் வைத்தால். உடனே கீழே குதித்துவிடு!
காவேரி :
அப்படியே செய்கிறேன்!
அன்னம் :
மற்றவர்கள் காவேரியைத் தொடர்ந்து கீழே குதியுங்கள்.
பலர் :
குதிக்கிறோம்!
படைத்தலைவன் :
நில்லுங்கள் வீரர்களே! இதென்ன தொல்லை! இந்தப்
பெண்கள் சரியான பேய்களாயிருக்கிறார்களே!
என்ன சொல்வது? தளபதி
காங்கேயன் அரசரைப் பார்த்து வருவதாக நேற்றே சென்றார்! இன்னும்
வரவில்லை. உம்... (யோசிக்கிறார்) வீரர்களே. அரண்மனைப் பகுதியில்
இந்த மண்டபத்தைத்தவிர
இன்னும் இடிக்காத மாளிகை
ஒன்றிருக்கிறதல்லவா? |