படைவீரன்-2 :
ஆமாங்க! மேற்பகுதியில் ஒரு மாளிகை இருக்குதுங்க.
படைத்தலைவன் : நீ, மற்றவர்களுடன் சென்று அந்த மாளிகையை
இடித்துத்தள்ளு. பிறகு இந்த
மண்டபத்தை இடிப்போம். அதற்குள் தளபதி
காங்கேயன் வந்துவிடக் கூடும்.
படைவீரன்-2 :
சரிங்க! (வீரர்களை நோக்கி) உம்...என்பின்னே வாங்க...
தலைவர்
குறிப்பிட்ட மாளிகையை இடிப்போம்.
[படைவீரன் - 2 முன் செல்ல மற்ற வீரர்கள் அவன் பின்னே
செல்கிறார்கள். படைத்
தலைவன் அன்னத்தை ஒரு முறை ஏறிட்டுப்
பார்த்து விட்டு, அங்கிருந்து அகல்கிறான்.]
-திரை-
காட்சி - 18
இடம் :
பாண்டியனின் பாசறை.
நேரம் :
நண்பகல்.
தோன்றுவோர் :
தாமரைக்கண்ணன், இராசேந்திரன், சுந்தரபாண்டியர்,
காங்கேயன், மழவர்
மாணிக்கம், காரணை விழுப்பரையர், பாண்டியப்
படைவீர்கள்.
[பாண்டியன் பாசறைக்கு முன்னே வீரர்கள் காவலாக நிற்கிறார்கள்.
அருகே சற்று ஒதுங்கி இராசேந்திரனும்
தாமரைக்கண்ணனும்
நிற்கிறார்கள்.] |