இராசேந்திரன் :
பாண்டியரைக் கண்டு பேசினால் பலன் கிடைக்கும் என்று
நம்பினேன். இந்தச்
சேவகர்கள் நம்மை அனுமதிக்க மறுக்கிறார்களே!
நண்பகலாகி விட்டது! ஞாயிறு மறையும்முன்
வருவதாக உன்
அன்னத்திடம் சொன்னோமே!
தா. கண்ணன் :
ஆமாம்! மீண்டும் ஒருமுறை சேவகரிடம் கேட்டுப்
பார்ப்போம்.
[தாமரைக்கண்ணன், சேவகரை நெருங்கிச் செல்கிறான். இராசேந்திரனும்
உடன் செல்கிறான்.]
தா. கண்ணன் :
ஐயா சேவகரே. காலையிலிருந்து உங்கள் அரசரைப்
பார்க்க வேண்டும், உள்ளே
அனுப்புங்கள் என்று எத்தனை முறை
வேண்டிவிட்டோம். இன்னும் உங்கள் மனம் இளகவில்லையா?
சேகவன்-1 :
உங்களுக்கு நானும் எத்தனை முறை முடியாது, முடியாது,
யாரையும் அரசர் இருக்கும் கூடாரத்துக்குள்
அனுமதிக்க முடியாது என்று
சொல்லிவிட்டேன். போய்த் தொலையாமல் என் உயிரை எடுக்கிறீர்களே!
இராசேந்திரன் :
எங்களை உள்ளே அனுப்பாவிட்டாலும் பாதகமில்லை.
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின்
வழிவந்த ஒருவன் அரசரைக்
காண்பதற்காக வாயிலில் காத்திருக்கிறான் என்னும் செய்தியையாவது
உங்கள் மன்னரிடம் சொல்லுங்களேன்.
சேகவன்-1 :
தேவையில்லாமல் அரசரின் முன்னே போய் நின்று,
முக்கியமில்லாத செய்தியைச்
சொன்னால் அது அரசரைத்
தொல்லைப்படுத்தியதாகும். அப்புறம் என் |