பக்கம் எண் :

118வளவன் பரிசு

  பாடு ஆபத்தாகும். தெரிகிறதா? இனியும் தொல்லைப் படுத்தாமல் விலகிச்
  செல்லுங்கள்.

தா. கண்ணன் : பாண்டியரைப் பார்க்கத்தான், அனுமதிக்கவில்லை.
  படைத்தலைவரையாவது பார்க்கலாமா?

சேவகன்-1 : இரு நாழிகைக்கு முன்பு இந்தக் கூடாரத்தில் இருவர்
  சென்றதைப் பார்க்கவில்லையா? அவர்கள் தான் படைத்தலைவர்கள்!
  ஒருவர் காங்கேயர்! மற்றவர் மழவர் மாணிக்கம்! அவர்களும் அரசருடன்
  உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களிடமும் உங்களை
  அழைத்துச் செல்ல முடியாது.

     [கூடாரத்திலிருந்து சேவகன் - 2 வருகிறான்.]

சேவகன்-2 : வேந்தர் வெம்மை பொறுக்க முடியாது வேதனையடைகிறார். 
  அதனால் அவர் படைத்தலைவர்களுடனும் அவைக்களப் புலவருடனம்
  அருகேயுள்ள சோலைக்குப் போகிறார். நான் போய்த் தேர் தயார்
  செய்யவேண்டும். விழிப்பாயிரு!

சேவகன் -1 : ஆகட்டும்.

  [சேவகன்-2 அங்கிருந்து செல்கிறான்.]

இராசேந்திரன் : (மெல்லிய குரலில்) தாமரைக்கண்ணா, இன்னும் சிறிது

  நேரத்தில் அரசர் இந்த வழியே வருவார் எனத் தெரிகிறது. அந்த நேரத்தில்
  ஏதாவது சொல்லி அவர் கவனத்தைக் கவர்ந்துவிடு.


தா. கண்ணன் : (மெல்லிய குரலில்) கவனத்தைக் கவரும்படியா? (யோசித்து)
  ஆ! நல்ல யோசனை! அரசர் என்னைக் கவனித்தே ஆகவேண்டும்!
  என்னோடு பேசாமல் அவரால் நகரமுடியாது!