பக்கம் எண் :

காட்சி - 18119

    [சுந்தரபாண்டியர் முன்னேவர, பின்னேகாரணை விழுப்பரையரும்,
    காங்கேயரும், மழவர் மாணிக்கமும் வருகிறன்றனர்.]

சேகவன் -1 : அரசர் வந்துவிட்டார்! (தாமரைக் கண்ணனிடம்) விலகி
  நில்லுங்கள்! அரசர் வாழ்க!

தா. கண்ணன் : (உரத்த குரலில்) பாண்டிய குலத்துரோகி சுந்தரபாண்டியர்
  வீழ்க!

இராசேந்திரன் : வீழ்க! வீழ்க!

சேவகன்-1 : ஆ! என்ன துணிவு! உன் நாவை அறுக்கிறேன்.

   [சேவகன் வாளையுருவித் தாமரைக்கண்ணன் பக்கம் திருப்ப,
   சுந்தரபாண்டியர் அவனைத் தடுக்கிறார்.]

சு. பாண்டியர் : சேவக, நில். (எதிரே நிற்கும் தாமரைக் கண்ணனையும்
  இராசேந்திரனையும் பார்த்து) வீழ்க, வீழ்க என முழங்கியது நீங்கள்தானே?

தா. கண்ணன் : ஆமாம்.

சு. பாண்டியர் : நீங்கள் சோழ நாட்டார் என்பது தெரிகிறது. தோற்ற
  நாட்டினர் வென்றவர்களை வீழ்க எனத் தூற்றுவது இயல்பு. அதனால்
  நான் வியப்படையவில்லை. தூற்றியபோது பாண்டிய குலத்தைப் பற்றி
  ஏதோ இணைத்துப் பேசினாயே?

தா. கண்ணன் : பேசினேன். நீங்கள் பாண்டிய குலத்துக்குத் துரோகம்
  செய்தவர் என்று ஏசினேன். வானளாவப் பறக்கும் மீனக்கொடிக்கு ஊனம்
  உண்டாக்கியவர் நீங்கள் என்று உரைத்தேன். பல்லாயிரம் ஆண்டுகளாகப்
  பாண்டியர்கள் சேர்த்த புகழை ஒரு