பக்கம் எண் :

120வளவன் பரிசு

  சேர அழித்துப் பெரும்பழி தேடுபவர் நீங்கள் என்பதைத் தெரிவித்தேன்.

சு. பாண்டியர் : (சினம் பொங்க) நாவடக்கிப் பேசு, என் சொந்தக்
  குலத்துக்கு நானா துரோகம் செய்கிறேன்? எதைக் கொண்டு இப்படிக்
  கூறுகிறாய்?

தா. கண்ணன் : சோழ நாட்டிலுள்ள கட்டடங்கள் யாவற்றையும் இடித்து
  அழிக்க ஆணையிடவில்லையா?

சு. பாண்டியர் : அஹ ஹ்ஹ்ஹா.....(சிரித்து) ஆம், ஆணையிட்டேன். அது
  என் குலத்துக்கு நான் செய்த துரோகச் செயலல்ல! என்
  குலத்துக்கேற்பட்ட பழியைத்துடைக்கும் புனிதச் செயல்! குலோத்துங்கன்
  பாண்டிய நாட்டை வென்றபோது, மாடமதுரையை வீழ்த்தியபோது
  எத்தனை கட்டடங்களை இடித்தான்! எரித்தான். பாண்டியரின்
  பெருமைக்குரிய அரசவை மாளிகையினையும் அழித்தான்! ‘சோழ
  பாண்டியன்’ என்னும் புதுப் பெயர் புனைந்துகொண்டு திரும்பினான்!
  அதற்குப் பழிவாங்கவே சோழ நாட்டின் கட்டடங்களைத் துகளாக்க
  ஆணையிட்டேன்!

தா. கண்ணன் : பழிக்குப் பழி என்னும் பாதக முயற்சியில் நீங்கள் தீராப்
  பழி தேடிக்கொள்கிறீர்கள். பாண்டிய வேந்தரே, உங்கள் நாட்டின்மீது
  குலோத்துங்கர்; உட்பட பல கோமான்கள் படையெடுத்திருக்கிறார்கள்;
  வென்ற நாட்டின் ஊர்களை எரியூட்டி அழித்திருக்கிறார்கள்;
  உறைவிடங்களை இடித்திருக்கிறார்கள். ஆனால் யாரேனும் தண்டமிழ்
  வளர்க்கும் தமிழ்ச் சங்கத்தைத் தாக்கி யிருக்கிறார்களா?
  தகர்த்திருக்கிறார்களா? ஆனால் நீங்கள் செய்வதென்ன? உறையூரில்

   பட்டினப்பாலை பாடியமைக்காக உருத்திரங்