பக்கம் எண் :

காட்சி - 18121

  கண்ணனார்க்குக் கரிகாலன் பரிசாகத் தந்த பதினாறு கால் மண்டபத்தை
  அழிக்க முயல்கிறீர்கள்! கண்ணன் மண்டபம், எங்கள் தமிழ்ச் சங்கத்தைப்
  போன்றது! மூவேந்தரில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை
  உங்களையே சாரும்! நீங்கள் தமிழுக்குப் பரிசாக வழங்கப்பட்ட
  மண்டபத்தை அழிக்கலாமா?

சு. பாண்டியர் : காங்கேயரே, இவன் சொல்வது உண்மையா?

காங்கேயன் : உறையூர் கட்டடங்கள் அனைத்தையும் அழிக்க
  உத்தரவிட்டிருக்கிறோம். அரண்மனைப்பகுதியில் உள்ள பட்டினப்பாலைப்
  பரிசில் மண்டபத்துக்கும் அந்த உத்தரவு பொருந்தும்.

இராசேந்திரன் : ஓ! நீங்கள்தான் காங்கேயரோ! கண்டன் உதயஞ்
  செய்தான் காங்கேயன் என்னும் உங்கள் முழுப்பெயரும் இந்தக் காவிரி
  நாட்டில் பலருக்கும் தெரியும். அதைவிடக் காங்கேயன் கன்னித் தமிழ்மீது
  தீராக் காதல் கொண்டவர் என்பது இன்னும் நன்றாகத் தெரியும். உங்கள்
  போர் வல்லமையை விடப்புலமையைப் பாராட்டித்தானே, சிறு
  பெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்னும்
  பைந்தமிழ்ப் பாவலன் உங்கள் மீது பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தம்
  பாடினான். ‘காங்கேயன் பிள்ளைத் தமிழ்’ என்னும் அந்த நூலுக்கு
  மகிழ்ந்து நூலியற்றிய புலவர்க்குச் சாத்தனேரி ஊரில் பலவேலி நிலத்தை
  இறையிலி நிலமாக்கிப் பரிசளித்த உங்கள் பெருமையை
  எங்களூர்ப்புலவர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்வார்களே! பாண்டியர்
  பழிவாங்கும் வெறியில் பட்டினப்பாலைப் பரிசில் மண்டபத்தை
  மறந்துவிட்டாலும், பக்கத்தில் நின்ற