பைந்தமிழ்ப் பிரியரான நீராவது அதை நினைவூட்டி விலக்களித்திருக்க
வேண்டாமா?
[காங்கேயன் தலைகுனிகிறார்]
காரணை விழுப்பரையர் : மழவர் மாணிக்கம், நீங்கள் தான் உறையூரை
அழிக்கும் பொறுப்பேற்றிருப்பதாக
அரசர் சொன்னார். சங்கப் புலவனின்
பரிசில் மண்டபத்துக்கு விலக்களிக்கவில்லையா?
மழவர் மாணிக்கம் :
பரிசில் மண்டபம் என் நினைவுக்கு வரவில்லை,
விழுப்பரையரே!
இராசந்திரன் :
மழவர் மாணிக்கம்! திருக்கானப் பேருடையன் மழவர்
மாணிக்கமா, தாங்கள்?
சொந்தவூர் மக்கள் உங்களை உயிராக நேசித்து
‘மழவச் சக்கரவர்த்தி’ என்று போற்றிப்
புகழ்வார்களாமே! அந்த மழவர்
மாணிக்கமா? தணியாத தமிழ்ப் பற்றுக் கொண்டு, கவிராயர்
ஈசுவரசிவ
உடையாரின் சீடராகி அமுதத்தமிழை அள்ளியள்ளிப் பருகி அதில்
ஆனந்தம் கொண்ட
நீங்களா, பட்டினப்பாலைப் பரிசில் மண்டபத்தையும்
அழிக்க ஆணையிட்டீர்கள்!
மழவர் மாணிக்கம் :
போரின் வேகத்தில் பரிசில் மண்டபம் நினைவில்லை
என்பதைக்
குற்றவுணர்வோடு ஒப்புக் கொள்கிறேன்.
இராசேந்திரன் :
சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் பாண்டியர்,
பாண்டியரின் அரசவைக்
கவிஞர், அருந்தமிழ்ப் புலவர் காரணை
விழுப்பரையர், பிள்ளைத் தமிழ் பெற்ற காங்கேயர்,
கவிராயர் ஈசுவர
உடையாரின் பாசத்துக்குரிய சீடர் மழவர் மாணிக்கம்-இத்தனை பேரும
தமிழ்
வல்லவர்கள்! தமிழை வளர்ப்பவர்கள்! இவர்களில் யாருக்கும்
பட்டினப் பாலைப் பரிசில்
மண்டபம் நினைவுக்கு வரவில்லை. |