பக்கம் எண் :

காட்சி - 18123

  அதனால் அந்தத் தமிழ்க்கோயில் இன்று இடிந்து விழப்போகிறது....

கா. விழுப்பரையர் : ஆ! பட்டினப்பாலை மண்டபம் இடிந்து விட்டதா?

தா. கண்ணன் : இதுவரை அழியவில்லை. ஆனால் சுந்தர பாண்டியர்
  உடனே தன் வீரர்களுக்கு அதைக் காக்குமாறு கட்டளையிடாவிட்டால்,
  இன்று அழிந்துவிடும்.

சு. பாண்டியர் : பாண்டியர் என்போர் பைந்தமிழ்க் காவலர். அந்தக்
  காவலன், ஒரு பாவலனின் பரிசில் மண்டபத்தை அழிப்பது அவமானம்!
  மீனக்கொடிக்கு ஊனம்! பாண்டிய குலத்துக்குத் துரோகம்! இப்போதே,
  அதை நிறுத்துகிறேன். (தாமரைக்கண்ணனை நோக்கி) கண்ணன்
  மண்டபத்தைக் காக்க இவ்வளவு பாடுபடும் நீ யாரப்பா?

இராசேந்திரன் : நான் சொல்கிறேன்! இவன் தாமரைக் கண்ணன்!
  தண்டமிழ்ப் புலவன்! கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் மரபிலே
  வந்தவன்! கண்ணன் மண்டபம் இப்போது இவனது சொத்து.

சு. பாண்டியர் : பட்டினப்பாலைக் கவிஞனின் வழியிலே வந்தவனா?
  அதனால்தான் அரசரின் எதிர்நின்று அச்சமற்றுப் பேசும்
  ஆண்மையிருக்கிறது (இராசேந்திரனைப் பார்த்து) நீயாரப்பா? என்
  படைத்தலைவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து
  வைத்திருக்கிறாயே!

தா. கண்ணன் : நான் சொல்கிறேன்! இவர்தான் கண்ணன் மண்டபத்தைக்
  காக்க வழி காட்டியவர்! பாண்டியப்