கா. விழுப்பரையர் :
அரசே நானும் உடன் வருகிறேன்!
காங்கேயர் :
நானும் உடன் வருகிறேன்!
சு. பாண்டியர் :
மழவர் மாணிக்கம். உன் தேர் இத்தனை பேருக்கும்
இடமளிக்குமா? தேரின்
பரிகள் இவ்வளவு பாரத்தை இழுத்துச் செல்லுமா?
ம. மாணிக்கம் :
இரண்டும் முடியும்! எல்லோரும் வாருங்கள்!
[மழவர் மாணிக்கம் முன்னே ஓடுகிறான். சுந்தர பாண்டியரும்
காங்கேயரும் விழுப்பரையரும் அவன் சென்ற வழியில் செல்ல தாமரைக்
கண்ணனும் இராசேந்திரனும் தாங்கா மகிழ்ச்சியில்
ஒருவரையொருவர்
தழுவிக் கொண்டபின், மன்னர் பின்னே செல்கின்றனர்.]
-திரை-
காட்சி - 19
இடம் :
உறையூர் அரண்மனையில் பதினாறுகால் மண்டபம்.
நேரம் :
பிற்பகல்.
தோன்றுவோர் :
அன்னம், உறையூர் மகளிர் பலர், படை வீரர்கள்,
படைத்தலைவன், ஊர்மக்கள்,
அம்பலம், சுந்தரபாண்டியர், காங்கேயன்,
மழவர் மாணிக்கம், காரணை விழுப்பரையர்.
[கண்ணன் மண்டபத்தின் மீது அன்னம் முதலான பெண்கள்
நிற்கிறார்கள். வீரர்கள் |