பக்கம் எண் :

126வளவன் பரிசு

  சிலர் மண்டபத்தின் அருகே நிற்கிறார்கள். உறையூர்ப் பெண்களின்
  அறப்போரைக் கேள்வியுற்று ஆடவரும் பெண்டிருமாகப் பெருங்கூட்டம்
  அங்கே கூடியிருக்கிறது.]

படைத்தலைவன் : எஞ்சிய மாளிகையை இடித்து விட்டீர்களா?

படைவீரன் : எப்போதோ முடித்துவிட்டோம்! இனி இந்த மண்டபத்தைத்தான் இடிக்கவேணும். இதைத் தவிர உறையூரிலே வேறு கட்டடங்களே இல்லைங்க.

படைத்தலைவன் : இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே எப்படிக்கூடியது?

படைவீரன் -2 : தெரியலைங்க!

படைவீரன்-3 : எனக்குத் தெரியும்! பாடுகிறான்)

   
கண்ணன் மண்டபம் காத்திட வேண்டிக்
    காரி கைப்படை போர் தொடுத்தது!
    முன்னம் அறியா விந்தைப் போரினைக்
    கண்ணால் காண வந்தது கூட்டம்!
    காளையர் வந்துளர்! கன்னியர் வந்துளர்!
    சீலர்கள் வந்துளர்! சிறுவரும் வந்துளர்!

படைத்தலைவன் : மூடுடா, வாயை! நினைத்தால் கவிதை பாடுகிறாய்!

  கூட்டத்தில் ஒருவர் : கண்ணன் மண்டபத்தின் நிழலில் நின்றால்
  பட்டமரத்துக்குக்கூடப் பாட்டு வருமே! இந்தப் பாண்டிய வீரனுக்குப்
  பாட்டு வந்ததில் என்ன விந்தை.