அதே பெயரை மேற்கொண்டு ஆட்சி செய்த இராசராசர் முடிகொண்ட
சோழபுரத்தில் ‘இராசராசேச்சுரம்’ என்னும் சிற்பக்கலையின் சிறப்பெல்லாம்
பொருந்திய அற்புதக் கோயிலைக் கட்டினார். இந்த இரண்டு
இராசராசர்களுக்குப் பிறகு, இன்று நானும் இராசராசன் என்னும் பெயரை
ஏற்றுக்கொண்டேன். என்ன பயன்? சோழ அரசின் பெருமை இன்று வீழ்ந்து
விட்டதே! திரும்பிய திசையெல்லாம் பகைவர்கள். எப்போது சோழ
நாடடைக் கூறு போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள்.
புவன :
வேந்தர் வேந்தே, வீண் கவலையை விட்டொழியுங்கள்! உங்களுக்கு
முன்னே ஆண்ட இராசராசர்கள் மாபெரும் கோயில் அமைத்துப் புகழ்
கொண்டார்கள்! அதைப் போல நீங்களும் உங்கள் காலத்தில் உலகம்
போற்றும் ஒரு செயலைச் செய்வீர்கள் என்று என் உள்மனம் உரைக்கிறது.
இராசராசர் :
தேவி, மற்ற இரு இராசராசர்களுக்கும் இல்லாத பெருமை
எனக்குண்டு. அவர்கள் துணைவியர் அலங்காரப் பதுமையர்! என்
மனைவியோ இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ்க்கும் முதல்வி. என
மெய்க்கீர்த்தியில், ‘இயல் வாழவும் இசை வாழவும் இமயமலை மகளறத்தின்
செயல் வாழவும் இராசராசன் திருத்தாலி பெற்றுடையார்’ என்று
உன்னைப்பற்றிக் குறிப்பிட ஆணையிட்டுள்ளேன். இப்போது எனக்குள்ள
பெருமையெல்லாம் அருந்தமிழ் வல்ல நீ அரசியாக, என் அன்புத்
துணைவியாக, என்னருகே அரியணையில் அமர்ந்திருப்பதுதான்.
புவன :
சோழர்கள் கருணை மிக்கவர்கள் என்பதை நான் அறிவேன்
சுவாமி! துணைவி பெற்றுள்ள |