பக்கம் எண் :

14வளவன் பரிசு

  திறமை எள்ளாக இருப்பினும் இமயமாக்கிப் புகழும் இயல்பை நான்
  அறியமாட்டேனா? அதோ சேவகன் வருகிறான்.

  [சேவகன் உள்ளே வருகிறான். வணங்கிய பின் பேசுகிறான்.]

சேவகன் : மன்னர் மன்னவ, அமைச்சர் பிருமாதிராசர் தங்களைக் காண
  வந்துள்ளார்.

இராசராசர் : வரச்சொல்.

  [சேவகன் வணங்கிச் செல்கிறான். சிறிது நேரத்தில் அமைச்சர் பிருமாதிராசர்
  வருகிறார்]

பிருமாதிராசர் : வணக்கம், வேந்தர் பெரும!

இராசராசர் : அமருங்கள்.

  [அமைச்சர் எதிரேயுள்ள ஆசனத்தில் அமர்கிறார்.]

புவன : அமைச்சரே, முடிசூட்டு விழா உங்களை ஓய்வு உறக்கமில்லாமல்
  அலைக்கழித்துவிட்டது போலும்.

பிருமா : அரசியாரே, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மை, என்றாலும்
  மகிழ்ச்சியான செயலில் ஓய்வில்லாமல் உழைப்பதும் உற்சாகமே தருகிறது!

இராசராசர் : அமைச்சரே, விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும்
  சென்றுவிட்டார்களா?

பிருமா : சென்றுவிட்டார்கள். சிறிது நேரத்துக்கு முன்னர்தான் பாண்டி
  நாட்டுப் பிரதிநிதிகளை வழியனுப்பி விட்டு வருகிறேன்.