பக்கம் எண் :

20வளவன் பரிசு

  வேண்டும் என்பதே என் இலட்சியம்! தந்தை குலோத்துங்க சக்கரவர்த்திகள்
  வாழ்நாளில் பாதியைப் போர்க்களத்திலே கழித்தார்! மன்னன் எவ்வழி
  மன்னுயிர் அவ்வழி! சோழப் பேரரசன் பாசறையிலிருக்கும் போது
  சோழநாட்டு வீரர்கள் பள்ளி யறையிலா, இருக்க முடியும்? அதனால் படை
  வீரரும் பாதி வாழ் நாளைக் களத்திலே கழித்து அலுத்தனர். சலித்தனர்!
  அதனால் போரை நாடவேண்டிய இளவீரனும் அதை வெறுத்தான்! அளவுக்கு
  மீறினால் அமுதமும் ஆலகால விஷந்தானே! அதனால் நான் என் நாட்டு
  மக்களுக்கு அச்சமற்ற, அழுகையற்ற; அவலமற்ற, ஆனந்த வாழ்வை-அமைதி
  வாழ்வை அளிக்கத்தான் விரும்பினேன். அந்தப்புரத்தில் உன்னருகாக
  அமர்ந்து, பைந்தமிழ்ப் பாலின் சிறப்பையெல்லாம் நீ யுரைக்க அந்தக்
  தமிழ்த் தேனாகப் பருகிப் பரவச வண்டாக மயங்கிக் கிடக்கவே
  விரும்பினேன்! ஆனால், என்ன செய்வது! உள் நாட்டில் சிலரும்,
  வெளிநாட்டில் சிலரும் சோழ நாட்டைப் பங்கிட்டுக்கொள்ளக்
  காத்திருக்கிறார்கள்! அந்த வஞ்சகரிடமிருந்து இந்த வள நாட்டையும் அதில்
  வாழும் மக்களையும் காக்கவேண்டாமா? வந்தபின் கலங்குவதைவிட வரும்
  முன் காப்பதே அறிவுடையோனுக்கு அழகு. அதனால் என்படை பலத்தைச்
  சரியாக அறிந்துகொள்ள முயல்கிறேன்! நாளைய அரசனாகப்போகும்
  இன்றைய இளவரசனுக்குத் தக்க பயிற்சி தரவேண்டாமா? அதனால்
  படைத்தலைவனோடு அவனையும் அனுப்பினேன்! தேவி, நான் நாளையே
  போருக்குப் புறப்படப் போவதில்லை! ஆனால் எந்த நொடியும்
  எதிரியின்மீது பாய, அவன் இதயத்தைப் பிளந்து, இரத்தத்தைக் குடிக்க,
  சோழப் புலியை ஆயத்தம் செய்யப்போகிறேன். அவ்வளவுதான்!

புவன : அதிசயம்! அதிசயம்!