அன்னம் :
நான் சிறிது நேரம் பொறுத்து வருகிறேன்.
அம்பலம் ;
உங்களைத் தனியே விட்டுவிட்டுச் செல்வதா?
அன்னம் :
எனக்கு வழி தெரியும்; வந்துவிடுவேன். நீ கடைக்குப் போ,
தந்தையார் உன்னைத் தேடுவார்.
அம்பலம் :
சரியம்மா! இருட்டுவதற்குள் வந்துவிடுங்கள்.
அன்னம் :
ஆகட்டும். நீ போ.
[அம்பலம் செல்கிறான். அவன் சென்ற பிறகு அன்னம்
தன்
பெயருக்கேற்ப நடந்து தாமரக் கண்ணன் முன்னே சென்று அவனைக்
கடந்து செல்கிறாள். இயற்கையை இரசித்துக் கொண்டிருந்த
தாமரைக்கண்ணன் குறுக்கிட்டகுமரியை ஏறிட்டுப் பார்த்து ‘இன்னார்’
என்பதை அறிந்து கொள்கிறான். உடனே அவன் முகம் ஆதவன் கண்ட
தாமரையாகிறது என்றாலும் மலர்ச்சியை மறைத்துக்கொண்டு. அவள்
பின்னே சென்ற விழிகளைப் பெயர்த்து முன்னே இருக்கும் மலர்களில்
படியச் செய்கிறான். விழிகள் போராடுகின்றன. என்றாலும் கண்ணன்
அவற்றை அடக்கி அன்னத்தைப் பார்க்காதபடி செய்கிறான். அவனைக்
கடந்து சென்ற அன்னம் இதைக் கவனித்து மனத்துக்குள் சிரித்துக்
கொள்கிறாள். பத்து முழதூரத்தில் பாங்காய் அமர்கிறாள்;
தொண்டையைக் கனைக்கிறாள். அதைக் கேட்டு அவள் பக்கம் ஒரு
நொடி திரும்பும் தாமரைக் கண்ணன் மீண்டும் மலர்களையே
கவனிக்கிறான்.]
அன்னம் :
(தனக்குள்) ஓ! என்னைக் கவனிக்க மாட்டீரோ! இதோ உங்களை
இங்கே-என்னருகே வரவழைக்கிறேன். (பாடுகிறாள்) |