பக்கம் எண் :

24வளவன் பரிசு

      மலை யழைக்குவனே கடல் தூக்குவனே
     வான் வீழ்த்துவனே வலிமாற்றுவனே
 
      [அன்னத்தின் பாடல் எண்ணத்தைத் தாக்க, எரியும் விழியோடு  
        எழுந்து அவளருகே விரைகிறான். அவன் வந்ததைக் கடைக்
        கண்ணால் கவனித்த அன்னம் இன்னும்
        உரக்கப்பண்ணிசைக்கிறாள்.]

அன்னம்: மலையகழ்க் குவனே! கடல்தூர்க் குவனே!
        வான்வீழ்க் குவனே! வளிமாற்று வனெனத்
        தான் முன்னிய துறை போகலின்
        பல்லொளியர் பணிவொடுங்கத்
        தொல்லருவாளர் தொழில் கேட்ப
        வடவர் வாடக் குடவர் கூம்பத்
        தென்னவன் திறல்கெடச் சீறி...
        அரிமா வன்ன அணங்குடைத் துப்பின்...
        திருமா வளவன்.....

  [அன்னம் பாடப்பாட, வியப்பு விந்தியமாய் வளர, மகிழ்ச்சி மாக்கடலாய்ப்
  பெருகத் தாமரைக்கண்ணன் உணர்ச்சி மயமாகிறான்]

தா. கண்ணன் : பெண்ணே.....

அன்னம் : என் பெயர்......

தா. கண்ணன் : உன் பெயர் அன்னம், உன்னுரு சொன்னம்!
  உன் குரல் குயிலே! உன்விழி கயலே!

அன்னம் : புலவர் புதல்வர் புதுப்பா புனைகிறாரோ!

தா. கண்ணன் : வணிகன் பெற்ற வனப்பின் வானமே!
  வனிதையர் அரசி! வாழ்கநின் குரலே!

அன்னம் : முடிந்ததா, கவிதை?