தா : கண்ணன்
:
கவிதைக்கு முடிவேது! ஈற்றடி பாடிய பின்னர்
முதலடியைத் தொடங்கவேண்டும்! இப்படியே தொடரவேண்டும்!
அன்னமே! சொன்னமே!
அன்னம் :
நிறுத்துங்கள் உங்கள் கவிதையை! அப்புறம் அது ஆபத்தில்
முடியும்!
தா. கண்ணன் :
என் கவிதை ஆபத்தில் முடியுமா?
அன்னம் :
ஆமாம்! என் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப்
பாட்டன் பாடிய பாட்டுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் கிடைத்தது.
வளவன் உள மகிழ்ந்து வழங்கினான். அதனை! அவ்வளவு
வழங்காவிட்டாலும், பதினாறு நூறுபொன் தா எனக் கேட்டால் என்ன
செய்வேன்! பட்டினப்பாலைக்கு, தான் முன்னரே கட்டிய பதினாறுகால்
மண்டபம் பரிசாகக் கொடுத்தான், சோழன். நீ பதினாறுகால் மண்டபம்
தராவிட்டாலும், ஆறுகால் மண்டபமாவது அளிக்கவேண்டும் என்றால்
நான் யாது செய்வேன்?
தா. கண்ணன் :
அன்னம், உன் மேனி சொன்னம் என்று சொன்னேனே!
அதைக் கொடுத்தால் போதுமே!
அன்னம் :
ஆசையைப் பார்!
தா. கண்ணன் :
அன்றொரு நாள் வளிக்கும் வலிக்கும் வேறுபாடறியாது
பாடி என் மனம் வலிக்கச் செய்தாய்! இன்று இசையும் பாவும் இரண்டறக்
கலந்து - ஒன்றிலே ஒன்றை ஒன்றும்படி பாடிக் களிக்கச் செய்தாய். இந்த
விந்தை எப்படி நிகழ்ந்தது?
அன்னம் : உங்கள் நிந்தையால் நிகழ்ந்த விந்தையிது. தமிழ் நாட்டில்
தோன்றிய தமிழ்ப் பெண் ஒருத்தி தமிழரின் பெருமைக்குரிய பாடலைப்
பிழை மலியப் |