தா. கண்ணன் :
விடுமின் எங்கள் துகில், விடுமின் எங்கள் துகில் என்ற
ஜயங்கொண்டான்
பாடலை நான் அறிவேன் அரிவையே!
அன்னம் :
அதென்ன பாடல்?
தா. கண்ணண் :
காதலுடன் ஒரு காளை, காரிகையின் சேலைத் தலைப்பைப்
பிடிக்கிறான். அதை
அகத்தே விரும்பியவள் புறத்தே வெறுப்பவள் போல்
நடிக்கிறாள். அதனால், விடுமின் எங்கள்
துகில் என்று கூறுகிறாள். ஆனால்
பிடிமின் எங்கள் துகில் என்று அது பொருள் வருவதைக் காளை
அறிகிறான்.
உன் முகத்தின் கோபம்......
அன்னம் :
உம்.....என் முகத்தின் கோபம்.....
தா. கண்ணன் :
உன் அகத்தின் தாபத்தை அறிவிக்கிறது
அன்னம் :
(நாணத்துடன்) பொய்! பொய்!
தா. கண்ணன் :
நன்றி!
அன்னம் :
எதற்கு?
தா. கண்ணன்:
நான் சொன்னது உண்மையென்று ஒப்புக் கொண்டதற்கு?
அன்னம் :
உண்மையென்றா ஒப்பினேன்? இல்லையே!
தா. கண்ணன் :
அன்னம் நீ ‘பொய் பொய்’ என்று சொல்லவில்லையா?
அன்னம் :
சொன்னேன்!
தா. கண்ணன் :
பொய் என்றால் பொய்யைக் குறிக்கும். பொய் பொய்
என்றால், ‘பொய்யானது பொய்’ |