பக்கம் எண் :

30வளவன் பரிசு

  எனப் பொருள் தரும். பொய், பொய்யானால் மெய்தானே!

அன்னம் : புலவர்கள் பொல்லாதவர்கள்! பொய்யை மெய்யாக்குவார்கள்!
  மெய்யைப் பொய்யாக்குவார்கள்!

தா. கண்ணன்  :  அன்னம், உன்னைச் சந்தித்துச் சரியாகப் பத்து
  நாளாகிறது. அதற்குள் பட்டினப்பாலையை முற்றும் கற்றவளாகிவிட்டாயே ! 
  யாரிடம் பாடம்?

அன்னம் : கடுங்கோபத்துடன் கடைக்கு வந்து நீங்கள் கண்டித்துச்
  சென்றபிறகு, நடந்ததை நினைத்து நாணினேன். என் மாளிகையின் எதிரிலே
  புலவர் வீடு. புலவரின் மகள்தான் பட்டினப்பாலை பாடுவாள். அவளை
  அணுகினேன். அவளிடம் பாடம் கேட்டேன். பட்டினப்பாலையின்
  சிறப்பெல்லாம் உணர எனக்குக் கற்றுத் தந்தாள். இப்போது பட்டினப்பாலை
  நூலை அறிவேன்; நூற்பொருளை அறிவேன்: பொருளின் நுட்பத்தையும்
  அறிவேன்.

தா. கண்ணன் : அன்னம், பட்டினப்பாலையின் சிறப்புகளில் அறிந்த
  சிலவற்றை விளக்கிச் சொல்! கேட்டு மகிழ்கிறேன்.

அன்னம் : சொல்லமாட்டேன். சொன்னால் நீங்கள் முன் போலவே
  என்னைப் பாராட்டுவீர்கள்.

தா. கண்ணன் : இப்போது நான் அணைத்தால் அதையாரும்
  காணமுடியாது! காரிருள் மெல்லக் கவிழ்ந்து கொண்டதைக்
  கவனிக்கவில்லையா?

   [அன்னம் சுற்று முற்றும் பார்த்துத் திடுக்கிட்டு எழுகிறாள்.]