பக்கம் எண் :

32வளவன் பரிசு

  என்னைப் பார்ப்பதற்காகக் கடை வீதியில் அலைய வேண்டாம் கண்ணா!
  நாளை மாலை இந்தச் சோலையில் இதே இடத்தில் என்னைச்
  சந்திக்கலாம்,

தா. கண்ணன் : இருள் சூழ்ந்துவிட்டதே ! உன் வீடுவரை நான் துணையாக
  வரட்டுமா!

அன்னம் : வேண்டாம் கண்ணா! தனியே செல்லும்பெண்ணுக்குத் தீது
  செய்யும் அளவு உறையூர் தாழ்ந்து விடவில்லை. நான் சென்று 
  வருகிறேன்.

     [தாமரைக்கண்ணன் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, அன்னம்
       புன்னகை யுதிர்த்தபின் மென்னடை நடந்து செல்கிறாள்.]

                         
-திரை-

                      காட்சி - 4

காலம் : காலை

இடம் : மதுரை பாண்டியனின் ஆலோசனை மண்டபம்.

தோன்றுவோர் : சுந்தரபாண்டியர், குருகுலத் தரையன், காங்கேயன், மழவர்
     மாணிக்கம்.

    [சுந்தரபாண்டியர் நடு நாயகமான ஆசனத்தில் கம்பீரமாக
    வீற்றிருக்கிறார். இருபுறத்தும் உள்ள ஆசனங்களில் குருகுலத்தரையன்,
    காங்கேயன், மழவர் மாணிக்கம் அமர்ந்துள்ளனர்.]

சுந்தரபாண்டியர் : முடிசூட்டு விழா அப்படியொன்றும் சிறப்பாக
   அமையவில்லை என்று கருதுகிறீரா, காங்கயேரே?