பக்கம் எண் :

காட்சி - 433

காங்கேயன் : ஆம் அரசே! சோழ மண்டலச் சக்கரவர்த்தியின் முடிசூட்டு
  விழாவிலே மூவுலகும் கூடும். எள் விழ இடமில்லாமல் முடிகொண்ட
  சோழபுரத்தில் மக்கள் கூட்டம் சேரும். விழா பத்து நாள், பதினைந்து
  நாள் நடக்கும். இப்படிப்பட்ட எண்ணத்தோடு சென்ற நாங்கள்
  ஏமாந்தோம்.

மழவர் மாணிக்கம் : அரச விருந்தினராக ஐந்து நாள் தங்கியதே நானும்
  காங்கேயனுமே, மற்றவர்கள் விழாவின் மறுநாளே விடைபெற்றுச்
  சென்றார்கள். சோழரின் உற்ற நண்பர்களான போசளர்கூட மூன்றாம்
  நாளே போய்விட்டார்கள்.

குருகுலத்தரையன் : காங்கேயரே, விழாவிற்கு வந்திருந்த சோழ
  அதிகாரிகளுடனும் சிற்றரசனுடனும் கலந்து பேசினீர்களா? அவர்கள்
  மனநிலை எப்படியிருக்கிறது என்று அறிந்தீர்களா?

காங்கேயன் : விழாவிற்கு வந்த முக்கியமானவர்கள் அனைவரையும் கண்டு
  பேசினோம். எல்லோரும் சோர்வோடு பேசினார்கள். குலோத்துங்கன்
  காலத்துப் போர்களினால் பாதிக்கப்பட்ட அவர்கள், போர் என்ற
  சொல்லைக் கேட்டே கலங்குகிறார்கள்.

மழவர் மாணிக்கம் : சோழ மன்னரைக் குறைகூறிப் பேசினேன். உடனே
  அவர்கள் சீறுவார்கள் என நினைத்தேன். யாரோ அந்நியனைப் பற்றிய
  பேச்சைக் கேட்பது போல அக்கறையற்றுக் கேட்டார்கள். சிலர் என்
  பேச்சையும் ஆதரித்தார்கள்.

காங்கேயன் : முடிசூடிய இராசராசன் போரை விரும்பாதவன். தந்தையுடன்
  பல களங்களில் பங்குகொண்டு போரின் கொடுமைகளைக் கண்டு மனம்
  குமுறிய